தமன்னாவுக்கு தான் ஓரங்கட்டிடுச்சு.. நயன்தாராவுக்காவது ஒர்க் அவுட் ஆகுமானு பார்க்கலாம்!

நயன் நடித்துள்ளதால், கொலையுதிர் காலம் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது படக்குழு.

சென்னை: கொலையுதிர் காலம் படத்தின் இந்தி பதிப்பு படுதோல்வி அடைந்துள்ளதால், படக்குழு நயன்தாராவை மட்டுமே நம்பியுள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன், பூமிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். இதன் இந்தி ரீமேக்கில் தமன்னா, பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தையும் சக்ரி டோலட்டி தான் இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களுமே ஜூன் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு பிரச்சினை காரணமாக கொலையுதிர் காலம் ரிலீசாகவில்லை. இந்தி பதிப்பான காமோஷி மட்டுமே திட்டமிட்ட தேதியில் ரிலீசானது. ஆனால் அது படுதோல்வி அடைந்துள்ளது.

காமோஷியின் தோல்வியால் கொலையுதிர் காலம் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது. இந்தியைப் போலவே தமிழிலும் பிளாப் ஆகிவிடுமோ என கலக்கத்தில் இருக்கின்றனர்.

சர்ச்சைப் பேச்சு:

சர்ச்சைப் பேச்சு:

கொலையுதிர் காலம் படம் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இசை வெளியீட்டு விழாவில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் படத்தின் தயாரிப்பாளர் மீது நயன்தாராவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

அந்தர்பல்டி:

அந்தர்பல்டி:

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் கொலையுதிர் காலம் படத்தை கடுமையாக விமர்சித்தார். இதனால் தயாரிப்பாளர் கடும் நெருக்கடிக்கு ஆளானார். பிறகு விக்னேஷ் சிவனை சமாதானப்படுத்தி, கொலையுதிர் காலம் படத்தை பாராட்ட வைத்தனர்.

தொடர் தோல்வி:

தொடர் தோல்வி:

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்' படம் தோல்வியை தழுவியது. ஐரா படமும் சரியாக ஓடவில்லை. இந்த தொடர் தோல்விகளில் இருந்து கொலையுதிர் காலம் படம் தன்னை மீட்டெடுக்கும் என நயன்தாரா நம்பி இருந்தார். ஆனால் காமோஷியின் தோல்வி அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

தமிழில் நம்பிக்கை:

தமிழில் நம்பிக்கை:

இந்தியில் தமன்னாவுக்கு இந்த படம் கைகொடுக்கவில்லை என்றாலும், தமிழில் நயன்தாராவுக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. தமிழில் தமன்னாவைவிட, நயன்தாராவுக்கு ரசிகர் வட்டம் அதிகம் என்பதால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறது படக்குழு. தமன்னா விட்டதை, நயன்தாரா பிடிக்கிறாரா என்பதை படம் ரிலீசாகும் போது பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X