ஒய் திஸ் கொலை வெறி அனிருத்?...தம்பிக்கு ஹீரோவாகனுமாம்!

சென்னை: நாயகன் அவதாரம் எடுக்குறாராம் 'கொலைவெறி'அனிருத்.

எல்லோரும் ஹீரோவாகலாம். இதுதான் இப்போதாக்கு கோலிவுட்டில் ஒரே டிரண்ட். விஜய் ஆண்டனியை தொடர்ந்து இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்துல ஹீரோவா பண்றாப்ளன்னு எல்லாருக்கும் தெரியும். இப்போ அந்த லிஸ்டுல அனிருத்தும் சேர்ந்துட்டாராம்.

அரிதாரம் பூசுன அனிருத்தை விரைவில் நாயகனாக வெள்ளித்திரைல பாக்கலாம். .

’3’ ஆல் ’16’களின் மனதைத் தொட்டவர்....

’3’ ஆல் ’16’களின் மனதைத் தொட்டவர்....

'3' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அனிருத், அறிமுகமான முதல் படத்திலேயே ' ஒய்திஸ் கொலவெறி' எனும் பாடலால் பாப்புலர் ஆனார்.

சூப்பருக்கு சொந்தம்

சூப்பருக்கு சொந்தம்

இசையமைப்பாளர் அனிருத் லதா ரஜினியின் உறவினராவார். அதனால தான் ரஜினி மகள் ஐஸ்வர்யா 'கொலைவெறி' வாய்ப்பு கொடுத்தார்.

அதிரடி....

அதிரடி....

3 படத்தால் தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் அனிருத் என 3 பேருக்கும் புகழ் தேடி வந்தது. கிட்டத்தட்ட 65 மில்லியன் ரசிகர்கள் இந்தப் பாடலை யு-டியூப் பில் பார்த்த சாதனையும் நடந்தது.

ஒரு நாயகன் உதயமாகிறான்...

ஒரு நாயகன் உதயமாகிறான்...

அனிருத் விரைவில் நாயகனாகவும் அவதாரம் எடுக்க இருக்காராம். ஒல்லி உடம்பே நல்ல குவாலிபிகேஷன்னு நினைச்சுட்டார் போல...

ஒன்றா.... ரெண்டா...17

ஒன்றா.... ரெண்டா...17

இதற்காக அவர் 17 கதைகளை கேட்டு விட்டாராம். ஆனால் அவற்றில் எந்தக் கதையையும் இது வரை தேர்வு செய்யவில்லையாம். (ஹீரோயினா ஆண்ட்ரியாவ போட்டுருந்தா உடனே ஓகே சொல்லிருப்பாரே, பாஸ்)

18னா ரொம்ப பிடிக்குமாம்...

18னா ரொம்ப பிடிக்குமாம்...

அதேசமயம் 18 ஆவதாக ஒரு கதையை கேட்டிருக்கிறார் அனிருத். கல்லூரி கலாட்டா சம்மந்தப்பட்ட அந்த கதை அவருக்கு பிடிச்சுருக்காம், ஆனாலும், அதில் நடிக்கலாமானு இன்னும முடிவு எடுக்கவில்லையாம்.

கிசு... கிசு...

கிசு... கிசு...

இவர் முதல் படத்திற்கு இசையமைத்த போதே நடிகை ஆண்டிரியாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் .வதந்தி நாயகனாக வலம் வந்த பெருமையும் இவரையே சாரும்

சொல்லால் சுட்ட சூப்பர்...

சொல்லால் சுட்ட சூப்பர்...

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹமான் மாதிரி ஆகணும்னு எதேச்சையா சொல்ல, ‘கிசுகிசுக்களை முதலில் குறை' என சூப்பர் அட்வைஸ் கிடைத்ததாம் கொலைவெறிக்கு.

மியூசிக் - அடிச்சுட்டாரு அதைப் பார்த்தோம், அடுத்து நடிக்கட்டு்ம், அதையும் பார்த்திருவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X