இன்றைய ரிலீஸ்... யான், தெரியாம உன்னைக் காதலிச்சிட்டேன்!
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு படங்கள் வெளியாகின்றன. ஒன்று ஜீவா நடித்துள்ள யான், அடுத்து விஜய் வசந்த் நடித்துள்ள தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்.
யான் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக துளசி நாயர் நடித்துள்ளார்.

யான்
ஜீவா இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படம், 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்
இந்தப் படத்தில் விஜய் வசந்த் நடித்துள்ளார். என்னமோ நடக்குது படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது. விஜய் வசந்தின் தம்பி வினோத் தனது ட்ரிபிள் வி ரிக்கார்ட்ஸ் மூலம் தயாரித்துள்ளார். கே ராமு இயக்கியுள்ளார்.

பேங் பேங்
ஹ்ரித்திக் ரோஷன், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள பிரமாண்ட படம் பேங் பேங். ஹாலிவுட் படமான டே அன்ட் நைட்டின் தழுவல். தமிழகத்தில் அதிக அரங்குகளில் வெளியாகியுள்ளது.

இரண்டு மட்டும்தான்
ஏற்கெனவே வெளியான ஜீவா, மெட்ராஸ் போன்ற படங்கள் இன்னும் அரங்குகளில் நன்றாகவே ஓடிக் கொண்டிருப்பதால், கூடுதலாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











