கொளுத்தி போடு... மெழுகுவர்த்தியை பற்ற வைக்க சொன்ன பிக்பாஸ்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டி உள்ளது. இதில் 27 வது நாளான இன்று இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கிற்கான போட்டி நடத்தப்பட்டது. கிராமம் மற்றும் நகரம் என இரு டீமாக பிரிக்கப்பட்ட இந்த டாஸ்கில் அதிக பணம் வைத்திருப்பவர்களாக வெற்றி பெற்ற அணி என பிக்பாஸ் நேற்றே கூறி இருந்தார்.

முதல் டாஸ்க்கிற்கான போட்டி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கொளுத்தி போடு என பெயரிடப்பட்டது. இதில் அணியினர் ஒன்றாக சேர்ந்து யார் போட்டியில் கலந்து கொள்ள போகிறார் என தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதில் அதிக மெழுகுவர்த்திகளை ஏற்றுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என கூறப்பட்டது.

Kollutthi podu...Luxury budget task for this week

இதில் நகரத்தார் அணி சார்பில் நிரூப், கிராமத்தார் அணி சார்பில் அபினய் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் நிரூப் அதிகபட்சமாக 47 மெழுகுவர்த்தியை ஏற்றி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற நிரூப்பிற்கு, நடுவரான இசைவாணி ரூ.3000 பரிசாக வழங்கினார்.

இரண்டாவது டாஸ்க்கிற்கு ஊதி உருட்டு என பெயர் வைக்கப்பட்டது. இதில் ஜிக்ஜாக்காக ஏற்றப்பட்டுள்ள விளக்குகளுக்கு இடையில் உள்ள பந்தை ஊதி, ஊதி ஒரு முறையில் இருந்து, மற்றொரு முனைக்கு கொண்டு வர வேண்டும். இதில் அதிகமான விளக்குகள் அணையாமல் உள்ளவருக்கு ரூ.4000 பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் வருண் மற்றும் ராஜு பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று ரூ.4000 ஐ பெற்றார் ராஜு. இந்த பணத்தில் பிக்பாஸ் வீட்டின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

அனைவரும் டாஸ்கில் பங்கேற்றுள் சமயத்தில் சுருதி மற்றும் பாவனி ஆகியோர் பிக்பாஸிடம் நேற்று தாங்கள் தாமரையிடம் இருந்து காயினை திருடியது சரியா, தவறா என விளக்கம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டிருந்தனர். அனைவரும் அதை தவறு என கூறுவதாகவும், ஆனால் தாங்கள் செய்தது சரியா என புரியவில்லை என பேசிக் கொள்கிறார்கள்.

இசைவாணி மற்றும் பாவனியிடம் பேசும் சுருதி, தற்போது அந்த காயினை பார்த்தால் வெறுப்பாக உள்ளது. ஆனால் அதை திருப்பிக் கொடுத்தால் அவர்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொண்டதை போல் ஆகி விடும். அதனால் அதை தர முடியாது என்கிறார்.

அதற்கு பாவனியும், நேற்று நடந்த விஷயங்களை பார்க்கும் போது என்னிடம் உள்ள காயினை கூட கொடுத்து விடலாமா என நினைத்தேன். ஆனால் அப்படி சொன்னால் அந்த பிரச்சனை வேறு மாதிரி ஆகி விடும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X