இன்று ஜிகிர்தண்டா, சரபம், சண்டியர்!

By Shankar

சென்னை: இன்று வெள்ளிக்கிழமை சரபம், ஜிகர்தண்டா, சண்டியர் உள்பட நான்கு படங்கள் வெளியாகின்றன.

வழக்கத்தைவிட அதிகமாக இந்த ஆண்டு தமிழில் திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 100 நேரடி தமிழ்ப் படங்கள் தயாராகிவிட்டன.

ஜூலை மாதம் முடிந்து, ஆகஸ்டின் முதல் வாரம் இது. இந்த மாதம் மட்டுமே கிட்டத்தட்ட 35 படங்கள் ரிலீசுக்கு தயாராக நிற்கின்றன. இந்த முதல் வாரத்தில் மட்டும் 4 படங்கள் வெளியாகின்றன. இன்று வெளியாகவிருந்த பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் நான்கு வாரங்களுக்கு தள்ளிப் போய்விட்டது.

சரபம்

சரபம்

இன்றைக்கு வெளியாகும் படங்களில் முக்கியமானது சரபம். அப்படி ஒன்றும் பெரிய பட்ஜெட் படமில்லைதான். ஆனால் திட்டமிட்டு பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடிக்கும் தயாரிப்பாளர் வெளியிடும் படம் என்பதால், திரையரங்குகளில் இந்தப் படத்துக்கு முன்னுரிமை கிடைத்துள்ளது.

ஜிகிர்தண்டா

ஜிகிர்தண்டா

பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் ஜிகிர்தண்டா. கடந்த வாரம் வெளியாகவிருந்து, தனுஷ் படத்தால் தள்ளி வைக்கப்பட்டது. இன்று வெளியாகிறது.

சண்டியர்

சண்டியர்

சோழதேவன் என்பவர் எழுதி இயக்கியுள்ள படம் சண்டியர். புதியவர்களின் படம் என்றாலும் 15 அரங்குகள் இந்தப் படத்துக்கு சென்னையில் கிடைத்துள்ளன.

முதல் மாணவன்

முதல் மாணவன்

இன்று வெளியாகும் இன்னுமொரு படம் முதல் மாணவன். முற்றிலும் புதியவர்கள் உருவாக்கியுள்ள படம் இது. சொற்பமான திரையரங்குகளே இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளன.

ஹெர்க்குலிஸ்

ஹெர்க்குலிஸ்

ஒரு நேரடி படத்தை விட அதிகமான அரங்குகளைப் பெற்றுள்ளது இந்த ஹாலிவுட் படம். தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது ஹெர்க்குலிஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X