இன்று ஒரே நாளில் 'தோணி' உள்பட 6 புதிய படங்கள் ரிலீஸ்!

இன்று மட்டும் 6 புதிய படங்கள் வெளியாகியுள்ளன. சிறுமுதலீட்டுப் படங்களுக்கு தியேட்டரகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெரிய நடிகர்கள் படங்களை பண்டிகை நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதையடுத்து இம்மாதம் ரிலீசாவதாக இருந்த தனுசின் 3, கார்த்தியின் சகுனி படங்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன (இவர்கள் எல்லாருமே பெரிய நடிகர்கள் வரிசைக்கு வந்துவிட்டார்களாம்!).
இந்த மாதம் சிறு பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் ரிலீசாகின்றன. அவற்றில் தோணி, ஒரு நடிகையின் வாக்கு மூலம், ஒரு மழை நான்கு சாரல், விளையாடவா, சூழ்நிலை, வாச்சாத்தி ஆகிய 6 படங்கள் இன்று வெளியாயின.
தோணி படத்தை பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். 'விளையாடவா' படம் செஸ் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. சூழ்நிலை என்ற படத்தில் சத்யா, நிழல்கள் ரவி, பவினா நடித்துள்ளனர்.
இவை தவிர ருத்ரபூமி என்ற ஆங்கில படமும் இன்று ரிலீசானது. சித்தார்த், அமலாபால் ஜோடியாக நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படமும், அதர்வா அமலாபால் ஜோடியாக நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படமும் வருகிற 17-ந் தேதி ரிலீசாகிறது. இதே நாளில் பார்த்தீபன் நடித்துள்ள அம்புலி, 3 டி படம் வெளியாகிறது.
இன்று வெளியாகும் படங்களில் தோணி தவிர, வேறு எந்தப் படத்துக்கும் முன்பதிவுக்கு ரசிகர்கள் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டாத நிலையே காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











