கோலிவுட்டில் அதிர்ச்சி.. பிரபல நடிகர் மரணம்.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்

சென்னை: கோலிவுட்டில் கடந்த 25 வருடங்களாக சண்டை பயிற்சியாளராக இருந்தவர் கோதண்டராமன். விஜய், அஜித் உள்ளிட்டோரின் படங்களிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். சண்டை பயிற்சியாளராக அவரை தெரிந்ததைவிடவும் கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் அவர் வந்த காமெடி சீனிலிருந்து பெரிதும் அடையாளப்பட்ட்டார். அந்த காமெடியில் தனக்கென தனி உடல்மொழியோடு நடித்திருந்தார் அவர். இந்தச் சூழலில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சினிமா என்னும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைவதற்கு பலருக்கும் விருப்பம். அந்த கனவு தொழிற்சாலைக்குள் வந்து தொலைந்து போனவர்களும் இருக்கிறார்கள், உயரம் சென்றவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ தங்களுக்கான அடையாளம் கிடைக்காமல் போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி போராடுபவர்களுக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கோதண்டராமன்.

santhanam

சண்டை பயிற்சியாளர்:

ஸ்டண்ட் மாஸ்டராகத்தான் தனது பயணத்தை தொடங்கினார் கோதண்டராமன். முதலில் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த அவர் அடுத்ததாக துணை சண்டை பயிற்சியாளராக மாறினார். பல படங்களுக்கு அப்படி பணியாற்றிய அவர் ராம்கியின் எல்லாமே என் பொண்டாட்டிதான் என்ற படத்துக்கு சண்டை பயிற்சியாளராக ப்ரோமோட் ஆனார். அதற்கு பல ஹீரோக்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், அஜித் படங்களுக்கு:

சண்டை பயிற்சியாளராக இருந்தாலும் அவ்வப்போது அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமலும் போயிருக்கின்றன. அந்த சமயத்தில் எல்லாம் எந்த ஈகோவும் இல்லாமல் துணை சண்டை பயிற்சியாளராகவும் பயணப்பட்டிருக்கிறார் அவர். அந்தவகையில் விஜய் நடித்த திருப்பாச்சி, அஜித் நடித்த திருப்பதி போன்ற படங்களில் பணியாற்றிய அவர்; நடிப்பையும் விட்டுவைக்கவில்லை. பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

கலகலப்பு:

படங்களில் அவர் நடித்தாலும் அவருக்கான பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது எதுவென்றால் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான கலகலப்பு திரைப்படம்தான். அந்தப் படத்தில் சந்தானத்தின் கேங்கில் ஒருவராக வருவார் அவர். கார் சேஸிங் காமெடி சீனில் எல்லாம் கோதண்டராமன் தனது நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தார். மேலும் அந்தப் படத்தில் கோதண்டராமனை திமிங்கலம் என்று சந்தானம் அழைத்ததும் படு ஃபேமஸாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு:

இந்நிலையில் 65 வயதாகும் அவருக்கு கடந்த சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனையொட்டி அவர் சிகிச்சையும் பெற்றுவந்தார். சூழல் இப்படி இருக்க சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். பெரம்பூரில் இருக்கும் அவரது வீட்டில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கோதண்டராமனின் இறப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X