படத்துக்கு தேவையான காட்சிகளை மட்டுமே ஹெச் வினோத் எடுத்துருக்காரு.. சமுத்திரக்கனி பாராட்டு!
சென்னை : நடிகர் அஜித், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தின்மூலம் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துடன் ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் இணைந்துள்ளனர்.

அஜித்தின் துணிவு படம்
நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, பாங்காக் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பிரம்மாண்ட மவுண்ட் ரோடு மற்றும் வங்கி செட் போடப்பட்டு படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது.

ரசிகர்களை கவர்ந்த துணிவு படம்
படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் அதிகமான வியூஸ் மற்றும் லைக்ஸ்களை பெற்றது. இந்தப்படம் முன்னதாக தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் படத்துடன் துணிவு மோதவுள்ளது. படத்திற்கான சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டு, தற்போது அந்தக் காட்சிகளின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

முக்கியமான கேரக்டரில் மஞ்சு வாரியர்
படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் அஜித் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், வெளியான படத்தின் ட்ரெயிலர் வேறு விதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. படத்தில் மஞ்சு வாரியருக்கும் முக்கியமான கேரக்டர் அமைந்துள்ளதாக தெரியவருகிறது. அவர் படத்திற்காக அஜித்துடன் இணைந்து ஜெட் ஸ்கை உள்ளிட்டவற்றையும் ஓட்டியுள்ளார்.

சிறப்பான பிரமோஷன்கள்
இந்தப் படத்தில் அவர் அஜித்திற்கு ஜோடியில்லை என்றும் படத்தில் அஜித்திற்கு ஜோடியே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பான வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் தங்களது பேட்டிகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.

சமுத்திரக்கனி பாராட்டு
இதனிடையே படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள சமுத்திரக்கனியும் பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்தப் படத்தின் மேக்கிங் குறித்து பேசுகையில், படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்பதே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அஜித் தன்னை புகழும் வகையிலான காட்சிகளை விரும்ப மாட்டார் என்றும் அதனால் படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டுமே ஹெச் வினோத் எடுத்துள்ளதாகவும் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனியை கவர்ந்த மேக்கிங்
ஹெச் வினோத்தின் மேக்கிங் மற்றும் அவரது டைரக்ஷன் தனக்கு புதிதாக இருந்ததாகவும் இந்த நேரத்தில் ஹெச் வினோத் மற்றும் அஜித்திற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சமுத்திரக்கனி மேலும் குறிப்பிட்டுள்ளார். தான் நடிக்கும் படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் சமுத்திரக்கனி, துணிவு படத்திலும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











