For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கர்நாடகா முருதீசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு… வைரலாகும் புகைப்படம்!

  |

  சென்னை : சிம்பு என்றும் எஸ்.டி.ஆர் என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சிம்பு தற்போது கர்நாடக கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  இந்த புகைப்படம் சிம்புவின் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

  4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா! 4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா!

  இதேபோல கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாலை அணிவித்து சபரி மலை சென்றிருந்தார்.

  குழந்தை நட்சத்திரமாக

  குழந்தை நட்சத்திரமாக

  விரல் வித்தை நாயகன் என பெயர் எடுத்தவர் சிலம்பரன். சம்சார சங்கீதம் என்ற படத்தில் I am a little star ஆவேனான் Super Star என்ற பாட்டுக்கு ஆடி பட்டையை கிளப்பி இருந்தார். டி ராஜேந்திரன் இயக்கிய 12க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் சிம்பு, எங்கவீட்டு வேலன், ஒரு வசந்த கீதம் உள்ளிட்ட படங்களில் பதின்பருவச் சிறுவனாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார்.

  காதல் அழிவதில்லை

  காதல் அழிவதில்லை

  2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றாலும், நடனம், துடிப்பு, வேகம், வசனம் என தனக்கேன தனி ஸ்டைலை காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

  ஆக்ஷன் ஹீரோவாக

  ஆக்ஷன் ஹீரோவாக

  அடுத்ததாக தம் படத்தில் நாயகனாக நடித்தார் சிம்பு.இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்று சிம்பிவை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ந்ததது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து கோவில், குத்து போன்ற திரைப்படத்தில் பொருத்தமாக பொருந்தி இருந்தார் சிம்பு.

  மன்மதன் வெற்றி

  மன்மதன் வெற்றி

  அதன் பின் தானாக முன் வந்து பல கதைகளை தேர்வு செய்து நடித்தார் பல இளைஞர்களையும் கவர்ந்தார். அதை தொடர்ந்து நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வலம் வந்தார். இவர் இயக்கத்தில் வெளிவந்த மன்மதன் திரைப்படம் பலராலும் பேசப்பட்டது அதுமட்டுமின்றி பல இளைஞர்களையும் இந்த திரைப்படம் கவர்ந்து. ஆனால் அப்போதே பல சர்ச்சைகளிலும் இவர் சிக்கினார்.

  அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தோல்வி

  அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தோல்வி

  ஷூட்டிங் போது டைமுக்கு வர மாட்டார் என்பதே இவரின் மேல் பல தயாரிப்பாளர்கள் வைக்கும் விமர்சனங்களை வைத்தனர். இந்த சூழ்நிலையில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. அதே ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கசிவந்தா வானம் சிம்புக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

  ஈஸ்வரன்

  ஈஸ்வரன்

  அந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, அசுர வளர்ச்சியுடன் குண்டாக இருந்த சிம்பு உடலை மெலிந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொங்களுக்கு திரையரங்கில் வெளியாகி வணிகரீதியாக வெற்றியைப் பெற்றுத்தந்தது. சிம்புவின் இந்த திடீர் மாற்றம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

  மாநாடு

  மாநாடு

  வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட் செலவில் படத்தை தயாரித்து வருகிறார். இதில் சிம்பு , அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிம்புக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், நடிகர் சிம்பு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  நதிகளிலேயே நீராடும் சூரியன்

  நதிகளிலேயே நீராடும் சூரியன்

  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள நதிகளிலேயே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதற்குத்தானே ஆசைப்படடா பாலகுமாரா இயக்குனர் கோகுள் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

  கோவிலில் சாமி தரிசனம்

  கோவிலில் சாமி தரிசனம்

  இந்நிலையில் நடிகர் சிம்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அப்படி இருந்த சிம்புவா இது என்று அவரை பிரம்மித்து பார்த்து வருகின்றனர்.

  Read more about: சிம்பு simbu str
  English summary
  Director Venkat Prabhu's 'Maanaadu' shooting of the film was almost wrapped up a few months ago. Kollywood actor Silambarasan visited the Lord murudeshwar temple in Karnataka.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X