சார்பட்டா பரம்பரை… இதுவரை சொல்லப்படாத கதை… மனம் திறந்து பாராட்டிய சூர்யா!
சென்னை : குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக சார்ப்பட்டா பரம்பரை உள்ளது.
அனைத்து தரப்பு மக்களையும் இத்திரைப்படம் கவர்ந்துள்ளதால், இப்படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மனம் திறந்து பாராட்டி உள்ளார்

அமேசான் பிரைமில்
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ்பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

குத்துச்சண்டை பயிற்சியாளர்
70களில், சென்னையில் குத்துச்சண்டை பரம்பரைகள் எவ்வாறு செயல்பட்டன என்பதை இந்த திரைப்படத்தில் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் எமர்ஜென்சி காலம் உள்ளிட்ட விவரங்களும் இயக்குனர் ரஞ்சித் இதில் கூறியுள்ளார். இதில் பசுபதி குத்துச்சண்டை பயிற்சி ஆளராக மிரட்டி உள்ளார்.

சிறப்பான நடிப்பு
இதில் கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்திற்காக உடலை முறுக்கேற்றி மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். அவரின் நடிப்பு மிகவும் பாராட்டும்படி உள்ளது. ஆர்யாவின் திரையுலக வாழ்வில் சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் பெயர் சொல்லும்.

இதுவரை சொல்லப்படாத கதை
இத்திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும் ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துக்கள் என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











