ஆக்ஷனா..காமெடியா..திரையில் தெறிக்கவிட்ட வாரிசு..பொதுமக்களின் கருத்து!

சென்னை : இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரையரங்கில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதிகாலை 4 மணி ஸ்பெஷல் ஷோவில் திரைப்படத்தைப்பார்த்த பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.

வாரிசு

வாரிசு

அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப செண்ட்டிமென்ட் படத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய தொழிலதிபராக உள்ள சரத்குமார், தனது மூன்று மகன்கள், மருமகள் பேரக்குழந்தைகள் என அழகான ஒரு கூட்டுக்குடும்பமாக இருக்கின்றனர்.

கதை இதுதான்

கதை இதுதான்

விஜய் அப்பாவாக சரத்குமாரும், ஷ்யாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இருவரின் விஜய்யின் அண்ணாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் சரத்குமாரின் பேச்சை கேட்டு பிசினசை கவனித்து வருகின்றனர். ஆனால், விஜய் மட்டும் அவரது சொந்த காலில் நிற்பேன் என்று வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். ஒரு கட்டத்தில், பிசினஸ் நஷ்டமடைந்து, கூட்டுக்குடும்பம் உடைந்துவிடுகிறது. இந்த நேரத்தில் வீட்டிற்குள் வரும் விஜய், பிசினசையும், குடும்பத்தையும் எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

நிச்சயம் பிடிக்கும்

நிச்சயம் பிடிக்கும்

வாரிசு படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த ஒரு ரசிகை, இப்படத்தில் விஜய் நடிப்பு மற்றும் பாடி லாங்குவேஜ் வித்தியாசமாக இருப்பாகவும், இது ஓவர் ஆக்டிக் போல தெரிந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. ஏற்கனவே நாம் பலமுறை பார்த்த படம் என்றாலும், விஜய் இதில் மிரட்டி இருக்கிறார். ஆக்ஷன் வேணுமா? காமெடி வேணுமா? இரண்டும் இருக்கு இந்த படம் தளபதி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக நிச்சயம் இருக்கும் என்றார்.

இரண்டாம் பாதி சூப்பர்

இரண்டாம் பாதி சூப்பர்

முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. இதில் விஜய் பேசும் ஒவ்வொரு வசனமும் சூப்பர், திரையரங்கில் விசில் பறக்கிறது. சரத்குமார் ஷ்யாம்,எஸ்ஜே சூர்யா ஆகியோரின் நடிப்பு அதிக கைத்தட்டல்களை பெற்றது. குறிப்பாக யோகி பாபுவின் காமெடி ரசிக்கும்படி உள்ளது. இயக்குனர் கார்டு வரும் போதே வம்சிக்கு கைதட்டல்கள் கிடைத்துள்ளது, உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படம் வாரிசு.

படத்தின் பிளஸ்

படத்தின் பிளஸ்

விஜய் படத்திற்கு முதன்முதலாக இசையமைத்திருக்கும் தமன், பின்னனி இசையில் புகுந்து விளையாடியுள்ளார். தமனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்துள்ளது.வழக்கம் போல விஜய்யின் டான்ஸ் அப்லாசை அள்ளியது. திரையில் நடிகர் விஜய் செய்யும் அனைத்துமே ஒரு மேஜிக்காக இருந்தது.மேலும், ராஷ்மிகாவுக்கு இன்னும் அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்து இருக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X