தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம்.. பிரபல நடிகைகள் எப்படி கொண்டாடுறாங்க பாருங்க!
சென்னை: திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரத்தையும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு சீக்கிரமே மாங்கல்ய வரத்தையும் நல்கும் வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்படுகிறது.
என்னதான் அரை டவுசர் அணிந்துக் கொண்டு மாடர்னாக மாலத்தீவில் போஸ் கொடுத்தாலும், இந்து பண்டிகைகள் என வந்து விட்டால் நம்ம ஊர் நடிகைகளை சொல்லவே வேண்டாம் பக்தி மோடில் சேலை அணிந்துக் கொண்டு பூஜை அறையில் வழிபாடு நடந்தும் புகைப்படங்களை அடுக்கி வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமி, நட்சத்திரா நாகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வரலட்சுமி விரதம் கொண்டாடிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
நக்ஷத்திரா நாகேஷ் வீட்டு பூஜை: வரலட்சுமி விரதம் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் வீட்டில் களைகட்டியுள்ளது. சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நக்ஷத்திரா சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், கணவருடன் வரலட்சுமி விரதத்தை வீட்டில் விமர்சையாக கொண்டாடி உள்ளார்.
பூஜை அறையில் வரலட்சுமி அம்மனை அலங்கரித்து படையல் போட்டு, பூ மாலைகளை அணிவித்து அமர்க்களப்படுத்தியுள்ளார் நக்ஷத்திரா நாகேஷ்.
விஜயலட்சுமி வீட்டில் வரலட்சுமி விரதம்: இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி சென்னை 28, அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, கசடதபற உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சர்வைவர் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள விஜயலட்சுமி ஃபெரோஸ் முகமதுவை திருமணம் செய்துக் கொண்டாலும் தொடர்ந்து இந்து மதத்தையே பின்பற்றி வருகிறார். பண்டிகை படத்தை இயக்கியவர் விஜயலட்சுமியின் கணவர் ஃபெரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் பூஜையறையில் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோவையே வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.
பிரணிதா வீட்டிலும் விசேஷம்: சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகை பிரணிதா வீட்டில் வரமகாலட்சுமி விரதம் கொண்டாடப்பட்ட நிலையில், பட்டுச்சேலையில், பக்காவாக போஸ் கொடுத்து அழகு ரதியாக காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கணவன் மற்றும் குழந்தை எங்கே காணோம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பல நடிகைகளும் வரலட்சுமி நோன்பை அனுசரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











