நயன் குழந்தையை பார்த்துட்டேன் அழகா இருக்காங்க..நயன்தாரா வீட்டிற்கு திடீரென சென்ற ராதிகா!

சென்னை : நடிகை ராதிகா சரத்குமார் நயன்தாரா வீட்டுக்கு நேரில் சென்று அவரது இரட்டைக் குழந்தைகளை பார்த்து வாழ்த்து கூறியுள்ளார்..

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக கலக்கி வரும் நடிகை நயன்தாராவுக்கு இந்த ஆண்டு மிகவும் ஸ்பெஷலான ஆண்டாகவே அமைந்துள்ளது.

ரௌவுடி பேபி படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்ட நயன்தாரா, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

நயன் விக்கி திருமணம்

நயன் விக்கி திருமணம்

நயன்தாரா விக்கி திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, அனிருத், ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமண வீடியோ வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியது. இதனை வெறும் வழக்கமான திருமண வீடியோவாக வெளியிடாமல் இருவரின் காதல் கதை அடங்கிய ஆவணப்பட பாணியில் வெளியிட நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிடபட்டுள்ளது.

இரட்டைக்குழந்தைகள்

இரட்டைக்குழந்தைகள்

திருமணமான நான்கே மாதத்தில் இவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் குழந்தை பிறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசு தரப்பில் நடத்திய விசாரணைக்கு பின்னர் தான் விக்கி - நயன் ஜோடிக்கு கடந்த 2016-ம் ஆண்டே திருமணம் ஆனதும், இவர்கள் கடந்த ஆண்டே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததும் தெரியவந்தது.

பல விமர்சனங்கள்

பல விமர்சனங்கள்

தீபாவளிக்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களது குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியிருந்தனர். வாடகைத்தாய் முறையில் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும், பலர் இவர்களின் இந்த முடிவுக்கு வாழ்த்துக்களை கூறி பாராட்டி வருகின்றனர்.

அழகான குழந்தைகள்

அழகான குழந்தைகள்

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சென்னை எழும்பூரில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு நேரில் சென்று குழந்தைகளை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ராதிகா தனது டுவிட்டரில் பகிர்ந்து அழகான குழந்தைகள் மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவனை பார்த்தது மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தில் ராதிகா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X