For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அம்சமாக ஜொலித்த.. வெள்ளித்திரை அம்மன்கள்.. ஒரு பக்திப் பார்வை!!

  |

  சென்னை : தமிழ் ரசிகர்களுக்கு பக்திப்படம் என்றால் ஆலாதி விருப்பம், அதுவும் அந்த படத்தில் வரும் மாயாஜால விக்தைகள், கிராஃபிக்ஸ் காட்சிகளை பார்க்க அனைவரும் விரும்புவார்கள். இது எப்படி நடக்கும், இது எல்லாம் சாத்தியமா என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் லாஜிக்கே இல்லை என்றாலும் மெய்சிலிர்க்க வைத்து படம் வெற்றி பெற்று விடும்.

  90களில் பக்தி படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது என்று சொல்லும் அளவுக்கு பக்தி படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட்டடித்தன. அதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் நாயகிகள் தான்.

  கம்பீரமான பார்வை, ஆக்ரோஷமான நடை, தெறிக்கும் வசனம் என கடவுளின் அவதாரமாக அவர்கள் திரையில் பிராகாசித்தார்கள். இப்படி வெளியான பக்தி மயமான படங்களில் கனகச்சிதமாக பொருந்திய நடிகைகள் சிலரை இப்போது பார்ப்போம்.

  25 ஆண்டு போராட்டம்... தன்னம்பிக்கை நாயகன் அருண்விஜய்.. ஒரு ஸ்பெஷல் சர்வே!25 ஆண்டு போராட்டம்... தன்னம்பிக்கை நாயகன் அருண்விஜய்.. ஒரு ஸ்பெஷல் சர்வே!

   கையெடுத்து கும்பிட

  கையெடுத்து கும்பிட

  அம்மன் படம் என்ற உடன் நம் நினைவுக்கு முதலில் வருவது ரம்யா கிருஷ்ணன் தான். எந்த கதாபாத்திரம் என்றாலும் மிரட்டும் நடிப்பை வெளிப்படுத்தி வாய் பிளக்க வைத்துவிடுவார். இருப்பினும் இவருக்கு கன கச்சிதமாக பொருந்தி, பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட வைக்கும் ஒரு வேடம் அம்மன் கெட்டப் என்றால் அது மிகையாகாது. அம்மன் திரைப்படத்தில் பல காட்சிகள் மெய் சிலிர்க்கும் அளவுக்கு நடித்து, நடிப்பின் அடுத்த பரிமாணத்தை வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, ராஜகாளி அம்மன், நாகேஸ்வரி போன்ற படங்களில் அம்மன் வேடத்தில் நடித்து அம்மன் வேடம் என்றால் இவர் தான் என்று சொல்லும் அளவுக்கு பெயர் எடுத்தார்.

   அம்சமான அம்மன்

  அம்சமான அம்மன்

  அனுஷ்கா ஷெட்டி முதன் முதலில் அம்மன் வேடத்தில் நடத்த படம் பஞ்சமுகி. இந்த படத்தில் அனுஷ்கா சாமி பக்தை, நாகரீக மங்கை என இரு வேடத்தில் இயல்பாக நடித்து இருப்பார். பஞ்சமுகி கோவிலில் பிறந்த அனுஷ்காவுக்கு அம்மன் அருள் கிடைக்க அந்த கிராமமே அவரை தெய்வமாக கொண்டாடுகிறது. கம்மீரமான ராணியாக ஆக்ரோஷத்தை காட்டி நிறைய படங்களில் அனுஷ்கா நடித்திருந்தாலும், மஞ்சள் சேலையில் பெரிய பொட்டு வைத்து பார்ப்பதற்கே அம்சமாக நெகிழ்ந்து போகும் அளவுக்கு அம்மன் வேடம் அவருக்கு அமைந்து இருந்தது என்பது தான் உண்மை.

   ரசிக்கும் படி

  ரசிக்கும் படி

  பொட்டு அம்மன் , கோட்டைமாரி அம்மன் போன்ற படங்களில் நடிகை ரோஜா அம்மன் வேடத்தில் நடித்திருப்பார். மாயாஜலம், கிராஃபிக்ஸ் போன்றவை பொட்டுஅம்மன் திரைப்படத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படி இருக்கும், ஒரு வித்தியாசமான அம்மன் படமாகும். இந்த படத்தில் ரோஜாவின் உடல்வாகுக்கு ஏற்றார் போல இந்த அம்மன் கெட்டப் அற்புதமாக ஒட்டிக் கொண்டது. அவருக்கு பொருந்தியும் இருந்தது.

   சாத்தமான அம்மன்

  சாத்தமான அம்மன்

  கொள்ளை கொள்ளும் அழகு, வசீகரிக்கும் உடல் வனப்பு, அனைவரையும் ஈர்க்கும் பார்வை என ஒரு அழகு பதுமையாக இருப்பவர் மீனா. மீனா என்ற பெயருக்கு ஏற்றார் போல இவரின் கண்கள் மீன் போல இவ்வளவு அம்சமாக இருக்கும். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். நடிகை மீனா அம்மன் வேடத்தில் பாளையத்தம்மன், படை வீட்டம்மன் உள்ளிட்ட சில படங்களில் பக்தி பரவசத்தில் நடித்து இருப்பார். வழக்கமாக அம்மன் படம் என்றால் அதில் ஆக்ரோஷம் நிறைந்த இருக்கும். ஆனால் இந்த படத்தில் மீனா ஒரு சாத்தமான அம்மனா நடித்திருப்பார்.

  கொரோனாவால் திருத்தபட்ட நடிகர்களின் சம்பள பட்டியல் | Producers New announcement
   ஜொலிக்கும் அம்மன்

  ஜொலிக்கும் அம்மன்

  பல அம்மன் அவதாரத்திற்கு சவால்விடும் அளவிற்கு பக்தி பரவசமூட்டும் வகையில் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் அழகான அம்மனாக ஜொலிக்கிறார் நயன்தாரா. மக்கள் தங்களின் மனக்குறையை கூற சிலர் போலி சாமியார்கள் அவர்களை சுயநலத்துக்காக எப்படி பயன்படுத்துக் கொள்கிறார்கள் என்பதை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. அம்மன் வேடம் என்றால் அது ரம்யாகிருஷ்ணன் தான் என்ற நிலை இந்த படத்திற்கு பிறகு இனி நயன்தாரா தான் என மாறி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

  English summary
  Kollywood Actresses who played the role of Amman
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X