துணை நடிகைகள் எல்லோரும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்களா?.. நடிகைகளை அதற்கு அனுப்பிய பிஆர்ஓ ஓபன் டாக்

சென்னை: தமிழ் சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரம் ஓய்ந்தபாடில்லை. சின்ன ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மட்டுமின்றி இப்போது பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளாக இருக்கும் நடிகைகளுக்குகூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் போயிருக்கிறது என்று அவர்களே ஓபனாக சில பேட்டிகளில் சொல்லியதுண்டு. இந்நிலையில் சினிமாவில் பிஆர்ஓவாக இருக்கும் வித்தகன் சேகர் என்பவர் கொடுத்திருக்கும் பேட்டி சில விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

சினிமா ஆணாதிக்கம் நிறைந்த துறை என்ற பேச்சு உண்டு. இங்கு ஹீரோவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்; பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என சொல்லப்படுவதுண்டு. அப்படி பல சமயங்களில் நடந்திருக்கின்றன. அதேபோல் காலங்காலமாக சினிமாவில் இருக்கும் இன்னொரு பிரச்னை என்னவென்றால் அட்ஜெஸ்ட்மெண்ட்தான். அந்த ஒரு விஷயத்துக்காகவே பல வீடுகளில் பெண்கள் சினிமாவுக்கு வருவதற்கு அச்சப்பட்டு ஒதுங்கியே இருக்கிறார்கள்.

ஒருமுறையேனும் கேட்டிருப்பார்கள்: சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை பல நடிகைகள் ஒருமுறையேனும் கேட்டுவிட்டுதான் வந்திருப்பார்கள். அதற்கு ஒத்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள், தனக்கு மானமும், சுயமரியாதையும்தான் முக்கியம். வாய்ப்புக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் நிலைமையில் தான் இல்லை என்று நெற்றிப்பொட்டில் அடித்தது மாதிரி சொல்லிவிட்டு வந்தவர்களும் இருக்கிறார்கள்.

Kollywood Adjustment Issue PRO Vithagan Sekar Exposes Dark Reality of Film Industry

டாப் நடிகைகளுக்கும்: அதேபோல் சினிமாவுக்குள் வரும் பெண்களையும், அந்தத் துறையில் இருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் மட்டும்தான் இந்த கொடுமை நடக்கும் என்ற மாய பிம்பம் இருக்கிறது. ஆனால் பெரிய ஹீரோயின்களான நயன்தாரா உள்ளிட்டவைகளுக்கும் அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் சென்றிருக்கிறது. முக்கியமாக வாரிசு நடிகையான வரலட்சுமியிடமே அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்கள் என்றால்; கோலிவுட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். தங்களிடம் அப்படி வந்து கேட்டவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு அப்படிப்பட்ட வாய்ப்பே தேவையில்லை என்று சொல்லிவிட்டு; திறமையால் அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

வித்தகன் சேகர் பேட்டி: இந்நிலையில் சினிமாவில் பிஆர்ஓவாக இருக்கும் வித்தகன் சேகர் என்பவர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "துணை நடிகைகள் எல்லோருமே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் நடிக்கிறார்கள் என்று சொல்வார்கள். அப்படி எல்லாம் இல்லை. படுக்கைக்கு சென்று வாய்ப்பு வாங்கியவர்களும் இருக்கிறார்கள்; திறமையால் மட்டுமே வாய்ப்பு வாங்கியவர்களும் இருக்கிறார்கள். எல்லோரையும் அப்படி சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மோகன் ஜி படம்: இப்போது ஃபேமஸான இயக்குநராக இருக்கிறாரே மோகன் ஜி. அவர் பகாசூரன் படத்தை இயக்கினார். அவர் என்னிடம் அண்ணா ஹீரோயின்களை என் படத்துக்கு ஆடிஷனுக்கு அழைத்து வருகிறீர்களா?. இங்கு அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லை. திறமைக்கு மட்டும்தான் வாய்ப்பு என்பதை தெளிவாக சொல்லி அழைத்து வாருங்கள் என சொல்லிவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X