திடீரென ஒண்ணா சேர்ந்த அஜித், விஜய் ரசிகர்கள்.. என்ன விஷயம் தெரியுமா? #UnrivalledTamilActors

சென்னை: தல, தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட்டின் அனைத்து டாப் ஹீரோ ரசிகர்களும் திடீரென ஒன்று சேர்ந்து தெலுங்கு ஹீரோக்களை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், #TeluguRealHeroes என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தெலுங்கு ஹீரோக்கள் தான் சூப்பர், தமிழ் ஹீரோக்கள் வேஸ்ட் என டிரெண்ட் செய்துள்ளனர்.

அதற்கு பதிலடி கொடுக்கத்தான் கோலிவுட் ரசிகர்கள் தற்போது #UnrivalledTamilActors என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.

எங்களுக்குள்ள அடிச்சிப்போம்

ட்விட்டரில் எப்போதும் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை வந்து தான் பார்த்திருப்போம். ஆனால், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே புதிய சண்டை உருவாகி உள்ளது. தல - தளபதி ரசிகர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும், இந்த விஷயத்தில் ஒன்றாக கைகோர்த்து தெலுங்கு ரசிகர்களை ஓடவிட்டு வருகின்றனர்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கிறார். அதே போல தனுஷ் நடித்த அசுரன் பட ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்நிலையில், தமிழ் நடிகர்களை விட தெலுங்கு நடிகர்கள் தான் சிறந்த நடிகர்கள் என்ற ரீதியில் #TeluguRealHeroes என்ற ஹாஷ்டேக்கை தெலுங்கு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் கூட்டாக ஒன்றிணைந்து #UnrivalledTamilActors என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நாங்க தான் மாஸ் என்று கெத்து காட்டி வருகின்றனர். மேலும், தெலுங்கு நடிகர்களை தமிழ் சினிமா ரசிகர்களும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

காமெடியன் டிரெஸ்

உங்க தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா எங்க காமெடியன் வடிவேலு டிரெஸ்ஸ போட்டுத் தான் போஸ் கொடுத்திருக்கிறார் என இந்த ரசிகர் ட்ரோல் செய்துள்ளார்.

காலடி போதும்

உங்க தெலுங்கு ஹீரோக்களின் மாஸ் காட்சிகளுக்கு பதில் சொல்ல எங்க தமிழ் சினிமா ஹீரோக்களின் காலடி காட்சி போதும் என இந்த ரசிகர் பயங்கரமா கமெண்ட் செய்துள்ளார்.

3000 தடவை பெட்டர்

தெலுங்கு படமான ஒக்கடுவை காப்பி அடித்துத்தான் விஜய் கில்லி படம் நடித்தார் என தெலுங்கு ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், ஒக்கடுவை விட 3000 மடங்கு கில்லி பெட்டர் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ரியாலிட்டி vs முனிசிபாலிட்டி

அர்ஜுன் ரெட்டி மற்றும் ஆதித்ய வர்மா புகைப்படங்களை கம்பேர் செய்து ரியாலிட்டி vs முனிசிபாலிட்டி என தெலுங்கு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அமேசான் vs நாப்டால்

மகேஷ் பாபு மற்றும் விஜய்யின் பல புகைப்படங்களை பதிவிட்டு இந்த ட்விட்டர் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல ரசிகர்கள் வரம்பு மீறி ஆபாசமான வசனங்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

என்னடா சவுண்டு

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், தளபதி விஜய், தல அஜித் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறாங்க அங்க என்னடா சவுண்டு என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X