டபுள் கேம் ஆடுகிறாரா அஜித்?.. இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு அடம்?.. அவங்கதான் பாவம்!
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். நடிப்பில் மட்டும் இல்லாமல் கார் ரேஸிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார். அஜித் குமாருக்கு தனது ரசிகர்கள் குறித்த கருத்து எப்போதும் பொதுவெளியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆனால் அவரது பேச்சும் செயலும் எதிராகவும் முரணாகவும் இருப்பதைப் பார்த்தால் அஜித்குமார் டபுள் கேம் ஆடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
சினிமா போன்ற ஒரு துறையில் வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரையறை. அஜித்தின் படத் தேர்வுகளைப் பார்க்கும்போது அவை பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளை மைய்யப்படுத்தியது என்பது தெளிவாகத் தெரிகிறது. அஜித் ஒரு படத்தில் நடிக்க ரூபாய் 120 கோடிகள் முதல் ரூபாய் 150 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகிறார் என்ற பேச்சு கோலிவுட்டில் உள்ளது. இதில் சற்று ஏறக்குறைய தொகையைத்தான் அஜித் சம்பளமாகப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அஜித் தனது படங்களின் புரோமோசன்களில் கலந்து கொள்வது இல்லை. ரசிகர்களை படம் பார்க்க வாருங்கள் என்று அழைப்பதில்லை. மாறாக, உங்களுக்கு விருப்பம் இருந்தால் வந்து படத்தை பாருங்கள், பிடித்திருந்தால் வந்து படம் பாருங்கள் என்று கூறுகிறார். ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டார். அஜித் இவ்வாறு சொல்வதிலும் செய்வதிலும் எந்த தவறும் இல்லை. இது ரசிகர்களின் நலனுக்காக செய்கிறார் என்ற பார்வையில் புரிந்து கொள்ள முடிகிறது.
பட்ஜெட்: ஆனால் தனது ரசிகர்களையே படம் பார்க்க அழைக்காத அஜித் குமாரால், அவரது ரசிகர்களும் பெரிய அளவில் படம் பார்க்க வரவில்லை என்றால், அஜித் குமாருக்கு சுமார் ரூபாய் 150 கோடிகள் சம்பளம் கொடுத்து, படத்தின் மற்ற கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு, இயக்குநருக்கு, இசையமைப்பாளருக்கு சம்பளம் கொடுத்து, படத்தை உருவாக்க பணம் செலவழித்து, படத்தை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்வதற்குள் அந்த தயாரிப்பாளர் செத்து பிழைக்க வேண்டிய சூழலை எதிர் கொள்கிறார் என்பதை அஜித் புரிந்து கொண்டிருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

சம்பளத்தில் காம்பர்மைஸ்: ரசிகர்கள் வந்து படம் பார்த்தால் தான் சுமார் ரூபாய் 250 கோடிகள் முதல் ரூபாய் 300 கோடிகள் வரை செலவு செய்து படமாக்கும் தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுக்கவும், அதில் லாபம் பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். தனது ரசிகர்கள் தங்களுக்கு நேரம் இருந்தால் வந்து படம் பாருங்கள் என்று கூறும் அஜித் குமார் தனது சம்பளத்தில் மட்டும் எந்த காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. இந்த பேச்சுதான் திரைத் துறையில் அடிபடுகிறது.
தயாரிப்பாளர்கள் மீது அக்கறை இல்லை?: இது எந்த வகையில் சரி என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. ரசிகர்கள் மீது அக்கறை கொள்ளும் அஜித், தன்னை நம்பி பல நூறு கோடிகளை செலவு செய்து தனது வாழ்க்கையை, உயிரைப் பணயம் வைக்கும் தயாரிப்பாளர்கள் மீது அஜித்துக்கு இருக்கும் அக்கறை என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. படத்தின் புரோமோசனுக்கு வரமாட்டேன், படத்தை வந்து பாருங்கள் என்று படம் ரிலீஸ் நேரங்களில் ஒரு வீடியோ கூட வெளியிடமாட்டேன், படத்தின் ரிலீஸ்க்காக பிரத்யேக பேட்டி கூட அளிக்க மாட்டேன், சூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கி டப்பிங் ஸ்டூடியோவோடு தனது வேலைகள் முடிந்தது என்று அஜித் தன்னை எல்லை படுத்திக் கொள்வது, என்பது அவரது தொழில் பக்தி மீது கேள்வி எழுப்ப வைக்கிறது.

கூட்டு வெற்றி: தான் பேசிய சம்பளம் தனக்கு முழுவதுமாக வந்துவிட்டதா என்பதில் கவனமாக இருக்கும் அஜித், தனது தயாரிப்பாளர் லாபம் அடைந்தாரா இல்லையா என்பதிலும் கவனம் செலுத்துவது தானே சரியாக இருக்கும். அதுதானே ஒரு கூட்டு வெற்றியாக இருக்கும். ஆனால் அஜித் அந்த கூட்டு வெற்றிக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தயாராக இல்லை என்ற பேச்சு திரைத்துறையில் பரவலாக உள்ளது. அந்த கூட்டு முயற்சி வெற்றி தருகிறதா இல்லையா என்பது தனிக்கதை என்றாலும், கூட்டு முயற்சிக்கு அஜித் தயாராக இல்லை எனும் போது விமர்சனங்கள் வரத்தானே செய்யும். அதேபோல், அஜித் முன்னணி நடிகர் தான், கமர்ஷியல் நடிகர் தான் அதில் எல்லாம் மாற்றுக் கருத்து இல்லை, அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை நினைக்கும்போதுதான் பாவமாக இருக்கிறது என்ற பேச்சும் உலா வரத்தானே செய்யும்.


Click it and Unblock the Notifications











