கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது.. லாஸுக்காக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்! #KollywoodAwaitsLosliya
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா சென்னை வந்துள்ளதை தொடர்ந்து கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், சக போட்டியாளரான கவினை காதலித்ததால் பெரும் பிரபலமானார்.
லாஸ்லியாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும் என்று உறுதியாக கூறினார் லாஸ்லியா. இந்நிலையில் கடந்த வாரம் இலங்கை சென்றார் லாஸ்லியா.

ட்ரென்டிங்
இந்நிலையில் அவர் இன்று இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளார். இதனை லாஸ்லியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது லாஸ்லியா என்ற ஹேஷ்டேக் ட்ரென்டாகி வருகிறது.
கவினுக்குதான் உரிமை
சினிமால மத்த ஹீரோ கட்டி பிடிச்சி முத்தம் கொடுப்பாங்க அரைகுறை டிரெஸ் போட சொல்வாங்க. இன்னும் நிறைய எடுப்பாங்க அதலாம் பாத்து எப்படிடா உங்களால ரசிக்க முடியும் என்னால முடியாது லாஸ்லியாவை தொடுற உரிமை கவினுக்கு மட்டும்தான் அது நடிப்பா இருந்தாலும் சரி! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ரொம்பவே பக்குவம்
தன்னோட தங்கைகளுக்கு அம்மாவ தன்னோட தாய்க்கே நல்ல ஆசானா இருக்குறது எல்லாம் ஒரு சில பெண்களால் மட்டுமே முடியும். லாஸ்லியா இதுல ரொம்பவே பக்குவம் ஆணவ. லாஸ்லியா மாதிரி பொண்ணுங்க நிறைய சாதிக்கணும் கண்டிப்பா சாதிப்பா என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
கற்றுக்கொள்கிறாள்
அவள் தனது வாழ்க்கையை அழகாக மாற்றத் தொடங்கியிருக்கிறாள். மிகவும் சிக்கலான வழிகளில் தன்னை எப்படி நேசிக்க வேண்டும் என்று அவள் கற்றுக்கொள்கிறாள் என்று கூறுகிறார் இவர்.
நிச்சயமாக ஜொலிப்பாள்
அவள் நிச்சயமாக ஜொலிப்பாள் என்கிறார் இந்த நெட்டிசன்.
வளர்ந்து காட்டனும்
நம்ம வளர்ச்சிய தடுக்கனும்னு நினைக்கிறவங்க முன்னாடி சிரிச்சுக்கிட்டே செமயா வளர்ந்து காட்டனும் அதுதான் அவங்களுக்கான பதிலடி என்று கூறுகிறார் இவர்.

மகிழ்ச்சி
#KollywoodAwaitsLosliya என்ற இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்ட்டாகி வருகிறது. இதனால் லாஸ்லியா ஆர்மியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications