பொங்கலோ பொங்கல்... ஏமாற்றிய அஜித்.. டாப் நடிகர்கள் படங்கள் மிஸ்ஸிங்.. பாக்ஸ் ஆபிஸ் கல்லா கட்டுமா?

சென்னை: பொங்கல் கொண்டாட்டத்திற்கு இந்த வருடம் புதிய திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. காரணம், நடிகர் அஜித் குமார், த்ரிஷா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து முடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால், அடுத்த தலைமுறை ஹீரோக்கள் இந்த பொங்கலில் வசூல் வேட்டை நடத்த காத்திருக்கின்றனர். எனவே 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வெற்றியை நோக்கி ஓடும் ஹீரோக்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த தொகுப்பு 90களில் பண்டிகை காலத்தில் குடும்பங்கள் கொண்டாடிய ஹிட் படங்களை இங்கு காணலம்.

பொங்கல் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது கிராமம் தான். நகரங்களை காட்டிலும் ஊர்ப்புறங்களில் பொங்கல் பண்டிகை கொஞ்சம் தூக்கலாக இனிப்புடன் சேர்ந்த தித்திப்பான கொண்டாட்டமாகவே இருக்கும். ரேடியோ கட்டி, மாட்டுவண்டி பூட்டி, நண்பர்கள் மற்றும் குடும்பங்களாய் ஒன்று சேர்ந்து ஒரு திருவிழாவை போல் பொங்கலோ பொங்கலோ எனக் கூறி கொண்டாடுவார்கள். விதவிதமான விருந்து படையலும், ஜல்லிக்கட்டு வேடிக்கை நிகழ்ச்சிகளை காண இளைஞர் பட்டாளம் காத்து கிடக்கிறது. இப்போ நாம டைம் டிராவல் பண்ணி 90களின் காலகட்டத்திற்கு பின்னோக்கி செல்வோம்.

https tamil oneindia com news chennai veeralakshmi-complaint-against-seeman-and-who-is-this-famous-tamil-actress-669885 html

பொங்கல் பண்டிகையை வைத்து வெளியான பாடல்களை கேட்டால் இன்று அதே துள்ளலோடு, சிலாகித்து பாடுவோம். பேருந்துகளில் ஜன்னல் ஓர சீட்டுகளில் அமர்ந்து கொண்டும், மயக்கும் இசைக்கும் நடுவில் பொங்கலோ பொங்கலோ சத்தங்கள் மனதளவில் புத்துணர்ச்சியை தரும் பாடல்கள் ஏராளம் உள்ளன. ஆனால், இயக்குநர் வி. சேகர் இயக்கத்தில் வெளியான வரவு எட்டணா செலவு பத்தணா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, காலம் மாறி போச்சு, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம் ஆகிய படங்களை பார்க்காம மிஸ் பண்ணிருந்தா கண்டிப்பா பார்த்திடுங்க. இந்த படங்கள் உங்க பீல் குட் மூவிஸ் லிஸ்ட்டில் இடம் பிடிக்கும்.

https tamil oneindia com news chennai veeralakshmi-complaint-against-seeman-and-who-is-this-famous-tamil-actress-669885 html

குடும்பங்களின் ரசனைகளை ரசிக்கும்படி வெளியான இப்படங்கள் சூப்பர் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தன. குடும்பங்களை ரசிக்க வைக்கிறது மட்டும் இல்லை, நடுத்தர வர்க்க பிரச்னைகளை மிக எதார்த்தமாக இயக்குநர் வி. சேகர் காட்சியமைத்திருப்பார். வடிவேலு, கவுண்டமனி காம்பினேஷனில் வரும் காட்சிகளை பார்த்தால் இப்படியொரு பீல் குட் மூவி இப்பவும் வந்தா எப்படி இருக்கும் என உச்சு கொட்டுவீர்கள். ஒரு பண்டிகையில் வரும் பண பிரச்னை அதற்கு பின்னாடி இருக்கும் காமெடி கலாட்டாக்களை பார்க்க் பார்க்க ரசிக்கத் தோன்றும். பொங்கல் பண்டிகையோ, தீபாவளி பண்டிகையோ புத்தாடை மட்டும் எடுப்பது மகிழ்ச்சி அல்ல குடும்பத்தோட ஒன்று சேர்ந்து, கொண்டாடும்போது நிறைவான பண்டிகையாக இருக்கும்.

https tamil oneindia com news chennai veeralakshmi-complaint-against-seeman-and-who-is-this-famous-tamil-actress-669885 html

அப்படி ஒவ்வொரு குடும்பத்திலும், அண்ணனோ, தம்பியோ, அக்காவோ சிலர் தவறு செய்திருப்பார்கள் அல்லது பிரிந்து தூரம் சென்றிருக்கலாம். ஆனால், இதுபோன்ற உறவுகள் நம் வாழ்வில் கிடைக்க போவது கிடையாது. இனிமேலும் பூமியில் துளிர்விடுவதும் இல்லை. பகையுணர்வை மன்னித்து அண்ணன், தம்பி, சித்தப்பா, சித்தி என ஒரு குடும்பமாய் இணைந்து பொங்கலை கொண்டாடி மகிழ்வோம்.

இந்த பொங்கலுக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா மற்றும் சில சிறிய பட்ஜெட் படங்களும் விஷாலின் 12 வருட லேட் ரிலீஸ் படமான மதகஜ ராஜா படமும் வெளியாகிறது.

https tamil oneindia com news chennai veeralakshmi-complaint-against-seeman-and-who-is-this-famous-tamil-actress-669885 html

ஆனால், ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் என எந்த முன்னணி நடிகர்கள் படமும் வராத நிலையில், தியேட்டர் ஓனர்கள் பெரிய வசூலை பார்ப்பார்களா? என்பது டவுட்டு தான். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் வெளியான நிலையிலே இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸை நிரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2023ல் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு வந்தபோது தான் தியேட்டர்கள் சிறப்பான பொங்கலை கொண்டாடியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X