அதிக எதிர்பார்ப்பில் உள்ள பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரு பார்வை!
சென்னை: இந்த ஆண்டில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பல சாதனைகளை புரிய, அடுத்து வரும் பெரிய ஹீரோக்களின் படங்களின் மேல் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
OTT தளங்கள் பிரபலமாக, திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் பெருக்கெடுக்க பெரிய ஹீரோக்கள் படம் மட்டுமே உறுதுணையாக உள்ளது. உதாரணமாக மாஸ்டர்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் திரையரங்குகளில் வெளிவரவுள்ள படங்கள் குறித்த ஒரு தொகுப்பு இதோ!

நெல்சன் இயக்கத்தில்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து படம் இயக்கவுள்ளதால் பெருவாரியான ரசிகர்களின் பார்வை டாக்டர் படத்தின் மேல் திரும்பியுள்ளது. இந்த படம் மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கர்ணன். தனுஷின் ஜகமே தந்திரம் OTT யில் ரிலீஸ் ஆகவிருப்பதால் இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது.

H. வினோத் இயக்கத்தில்
H. வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் வலிமை. தலைப்பு அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் இது வரையில் வேறு எந்த அறிவிப்பும் வெளியாகாதது அஜித் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே தான் போகிறது. இந்த படம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் இயக்கத்தில்
ஏற்கனவே தொடர்ந்து வியப்பூட்டும் படைப்புகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக அவருடைய இன்ஸ்பிரேஷனான உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ள திரைப்படம் விக்ரம். தற்போது அரசியல் களத்தில் கமல் பிசியாக இருக்க, கூடிய விக்ரம் படம் குறித்த அறிவிப்பும், இந்த வருடத்தின் முதல் பாதியில் படமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











