For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. சூப்பரா ஜெயிச்ச சிஎஸ்கே.. தல தோனியை கொண்டாடும் பிரபலங்கள்!

  |

  சென்னை: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்பது போல இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நேற்று தொடங்கியது.

  Captain Dhoniயின் 100வது வெற்றி! | OneIndia Tamil

  முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

  நேரடியா ஸ்டேடியத்திற்கு சென்று ஆரவாரம் செய்து கொண்டு பார்க்க முடியாத ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும், டிவிக்கு முன் தோனி தோனி என கத்திக் கொண்டு சிஎஸ்கேவின் வெற்றியை கொண்டாடி உள்ளனர்.

   என்னைக் கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார்.. அனுராக் மீது பிரபல நடிகை பரபரப்பு பாலியல் புகார்! என்னைக் கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார்.. அனுராக் மீது பிரபல நடிகை பரபரப்பு பாலியல் புகார்!

  மாஸ்டர் இயக்குநர்

  மாஸ்டர் இயக்குநர்

  சமூக வலைதளங்கள் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்தும், தல தோனியின் 100வது ஐபிஎல் வெற்றி பற்றியும் தான் பிரபலங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என தல தோனியின் போட்டோவை போட்டு வெற்றியை கொண்டாடி உள்ளார்.

  ஆடை இயக்குநர்

  ஆடை இயக்குநர்

  இளம் இயக்குநர்கள் மட்டுமின்றி ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் தான் என்பது நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் முடிவுக்கு அவர்கள் கொடுத்து வரும் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்‌ஷன்களே காட்டிக் கொடுக்கின்றன. ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், அம்பத்தி ராயுடு மற்றும் டு பிளஸி ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு அரை சதங்களை கடந்து வெற்றியை சிஎஸ்கே வசம் ஆக்கியதை குறிக்கும் வகையில் மெர்சல் மீம்ஸை போட்டு தெறிக்கவிட்டுள்ளார். ரெண்டா வருவேன் டா..

  நடிகை கஸ்தூரி

  நடிகை கஸ்தூரி

  அவுட் ஆனாலும், நாட் அவுட் ஆனாலும், ஒரே மாதிரி கூலாக இருப்பார் கேப்டன் கூல் தோனி, தல ஃபார் எ ரீசன் என நடிகை கஸ்தூரி தோனியின் புகைப்படங்களை ஷேர் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்களுடன் ட்வீட் போட்டு கொண்டாடி வருகிறார்.

  வரு

  வரு

  சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகையான நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார், தல தோனி டாஸ் வென்றது முதல், கிரிக்கெட் போட்டி முடியும் வரை ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். வீட்டில் இருந்தாலும், மைதானத்தில் இருந்து மேட்ச் பார்க்கும் எஃபெக்ட் இருக்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே மஞ்சள் நிற ஜெர்ஸி அணிந்தபடி எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

  ஷிவானி நாராயணன்

  ஷிவானி நாராயணன்

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக மஞ்சளி நிற டாப்ஸ் மற்றும், மஞ்சள் நிற ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு டிவிக்கு முன் செம மாஸாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் டிவி சீரியல் நடிகை ஷிவானி. சீக்கிரமே பிக்பாஸ் பிரபலமாக மாறப் போகிறார். அப்புறம் ரசிகர்கள் ஐபிஎல் பார்ப்பாங்களா? இவங்களுக்காக பிக்பாஸ் பார்ப்பாங்களா?

  தோனி ஜெர்ஸி

  தோனி ஜெர்ஸி

  நான் தான் உன் தோனி.. என்னோட வா நீ என ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு படத்தில் ஆத்மிகாவை பார்த்து பாடி ஆடுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், அதற்கு தனது ஆதரவை அளிக்கும் விதமாக நடிகை ஆத்மிகா, தோனியின் 7 நம்பர் ஜெர்ஸியை அணிந்து கொண்டு பின் பக்கமாக திரும்பி நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.

  பிக்பாஸ் கவின்

  பிக்பாஸ் கவின்

  "செயல்" என தல தோனியின் மாஸ் புகைப்படத்தை போட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை நடிகர் கவின் கொண்டாடி உள்ளார். ஏகப்பட்ட திரை பிரபலங்கள் சென்னை அணி வெற்றி பெற்றதை கொண்டாடி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 162/9 விக்கெட்டுகளை மும்பை பறிகொடுத்த நிலையில், சிஎஸ்கே 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

  மனைவியுடன் சாந்தனு

  மனைவியுடன் சாந்தனு

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர விசிறிகளான நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி விஜய் இருவரும் இணைந்து மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து கொண்டு, வீட்டில் டிவியில் கிரிக்கெட்டை பார்த்து, சிஎஸ்கேவின் வெற்றியை கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

  English summary
  Kollywood celebrities celebrates the CSK first win at IPL 2020. From Lokesh Kanagaraj to Shivani tweet about their joy of celebration.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X