இயக்குநர் ஷங்கரின் தாயார் காலமானார்.. சேரன் முதல் சாந்தனு வரை திரைத்துறை பிரபலங்கள் இரங்கல்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் தாயார் எஸ். முத்துலக்‌ஷ்மி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

அம்மாவை இழந்து சோகத்தில் வாடி வரும் இயக்குநர் ஷங்கருக்கு திரைத்துறை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் கொரோனா நிவாரண நிதிக்காக இயக்குநர் ஷங்கர் ரூ. 10 லட்சம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தாயார் காலமானார்

தாயார் காலமானார்

ஜென்டில்மேன் முதல் 2.0 வரை பிரம்மாண்ட படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வரும் இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலக்‌ஷ்மி அம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 88. முத்துலக்‌ஷ்மி அம்மாள் மறைவுக்கு திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோகத்தில் ஷங்கர்

சோகத்தில் ஷங்கர்

இந்தியன் 2 படம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், லைகா நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வரும் ஷங்கருக்கு தாயாரின் மறைவு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேரன் இரங்கல்

சேரன் இரங்கல்

இயக்குநர் ஷங்கரை டேக் செய்து போட்டுள்ள ட்வீட்டில் இயக்குநர் சேரன், "தங்களின் தாயாருக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலி .. அவரின் ஆன்மா அமைதிகொள்ளட்டும்.." என பதிவிட்டுள்ளார்.

அருண் விஜய் இரங்கல்

அருண் விஜய் இரங்கல்

நடிகர் அருண் விஜய்யும் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலக்‌ஷ்மி அம்மையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாந்தனு இரங்கல்

சாந்தனு இரங்கல்

இயக்குநர் ஷங்கரின் தாயார் மறைவுக்கு நடிகர் சாந்தனுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ் சினிமா ரசிகர்களும் மற்ற சில பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X