தமிழ்ப் புத்தாண்டு.. ரசிகர்களுக்கு கார்த்தி, அதுல்யா, ஆத்மிகாலாம் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

சென்னை: சித்திரை முதல் நாளை முன்னிட்டு தமிழ்ப் புத்தாண்டு பண்டிகையை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

'பிலவ' தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன், கார்த்தி, சமுத்திரகனி, சாந்தனு, ஆத்மிகா உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ரசிகர்களுக்கு சொல்லியிருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் குறித்து இங்கே காண்போம்..

கார்த்தியின் புத்தாண்டு வாழ்த்து

கார்த்தியின் புத்தாண்டு வாழ்த்து

"இந்நன்னாளில் புதிய எண்ணங்கள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள், இவை அனைத்தும் நம் உள்ளத்தில் மகிழ்ச்சியும் வாழ்வில் ஏற்றமும் அளிக்கட்டும்! அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நம் உழவர்கும் நல் வழி கிடைக்கட்டும்!" என நடிகர் கார்த்தி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கமல் வாழ்த்து

கமல் வாழ்த்து

"தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்." என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார்.

சமுத்திரகனி வாழ்த்து

சமுத்திரகனி வாழ்த்து

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் சமுத்திரகனி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என வாழ்த்து போஸ்டரை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார். சமீபத்தில் ஏலே படத்தில் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சமுத்திரகனி அடுத்ததாக தலைவி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களிலும் மிரட்ட உள்ளார்.

சாந்தனு வாழ்த்து

சாந்தனு வாழ்த்து

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும், மலையாள மக்கள் இன்று கொண்டாடும் விஷு பண்டிகைக்கும் தனது வாழ்த்துக்களை நடிகர் சாந்தனு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் சாந்தனுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் என ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீபிரியாவின் ட்வீட்டுக்கு கீழ் அவரது ரசிகர்களும் அவருக்கு சித்திரை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆத்மிகா வாழ்த்து

ஆத்மிகா வாழ்த்து

விரைவில் ரிலீசாகவுள்ள விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்திற்காக காத்திருக்கும் நடிகை ஆத்மிகாவும் தனது ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், சுடிதார் அணிந்து செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர்களை போல மேலும், பல சினிமா பிரபலங்கள் தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுல்யா வாழ்த்து

அதுல்யா வாழ்த்து

தமிழ்ப் பெண்ணுக்கே உரிய அழகான வெட்கத்தோடு சேலை அணிந்து செம அம்சமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை நடிகை அதுல்யா ரவியும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான இவரது முருங்கைக்காய் சிப்ஸ் டிரைலர் வேற லெவலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ரம்ஜானுக்கும் வாழ்த்து

ரம்ஜானுக்கும் வாழ்த்து

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி வெற்றிமாறனின் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து. முஸ்லிம் உறவை பேணும் விதமாக, "அன்பு தமிழ் உறவுகளுக்கு எனது இனிய "தமிழ் புத்தாண்டு" மற்றும் "ரம்ஜான் முதல் நோன்பு" நல்வாழ்த்துகள் என அழகாக வாழ்த்தி பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X