நல்லா இருப்போம்.. நல்லா இருப்போம்.. புத்தாண்டு வாழ்த்து சொன்ன திரைபிரபலங்கள்!
சென்னை: புத்தாண்டு என்றாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம் எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு இன்று நள்ளிரவுடன் முடிவடைந்து, 2024ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் கேக் வெட்டி, வண்ண வண்ண விளக்குகளுக்கு நடுவே பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தேவாலயங்களில் கூடிய மக்கள் புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலர் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், தங்களது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போயஸ் கார்டன் இல்லத்தில் அதிகாலை முதல் காத்திருந்த ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு கைஅசைத்து வாழ்த்து தெரிவித்தார். புத்தாண்டை யொட்டி அவரது இல்லம் வாழை மரம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

குஷ்பு: நடிகை குஷ்பு ஆங்கில புத்தாண்டையொட்டி குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு பல பலதரப்பட்ட அனுபவங்களை எனக்கு கொடுத்தது. மகிழ்ச்சி மற்றும் கண்ணீரின் தருணங்கள், அன்புக்குரியவர்களின் இழப்பு மற்றும் அவர்கள் இல்லாமல் வாழ எடுத்த நெகிழ்ச்சி ஆகியவை நமக்கு நினைவிற்கு வருகின்றன. நாங்கள் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும் வேதனையையும் சந்தித்தோம். இந்த ஆண்டு ஓர் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துவதாக பதிவிட்டிருந்தார்.

மீனா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது, 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை சிறப்பிக்கும் விதமாக, வெள்ளை நிற சல்வாரில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

ரேஷ்மா: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து இவர் செய்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய்டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் இவர் தற்போது, சினிமாவிலும் பிஸியாக இருக்கிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தனது ரசிகர்களுக்கு நியூ இயர் வார்த்து தெரிவித்துள்ளார்

திவ்யதர்ஷினி: சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கியதில் இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள ஷோ என்றால் அது காஃபி வித் டிடி நிகழ்ச்சி தான். இப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த டிடி தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாக்ஷி அகர்வால்: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் குயினாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள்! 2024ம் ஆண்டு மகிழ்ச்சி, வெற்றி மற்றும் மறக்க முடியாத தருணங்களைக் கொண்டுவரும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











