அஜித் மேனேஜர் டூ அதர்வா வரை! காதலியை கரம் பிடித்த அஜய் ஞானமுத்து.. திரண்டு வந்து வாழ்த்திய திரையுலகம்

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், டிமான்ட்டி காலணி. இந்தப் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. தற்போது டிமான்ட்டி காலணி 3 படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவில், டிமான்ட்டி காலணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர், அஜய் ஞானமுத்து. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுவரை வந்த பேய் படங்களிலேயே இவரது டிமான்ட்டி காலணி படம் மொத்தமும் வித்தியாசமாக இருந்தது. தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் திரும்பிப் பார்க்க வைத்தார்.

demante colony 2 ajay gananmuthu ajay gananmuthu marriage

அதன் பின்னர், நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக், அதர்வா என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து, இமைக்கா நொடிகள் என்ற படத்தினை இயக்கினார். இந்தப் படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக கதைக்குத் தேவையான க்ரைம் த்ரில்லர், காதல், எமோஷன் என எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடித்திருந்தார்.

demante colony 2 ajay gananmuthu ajay gananmuthu marriage

அஜய் ஞானமுத்து: அதன் பின்னர் விக்ரம் உடன் இணைந்து, கோப்ரா படத்தினை எடுத்தார். இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஹாட்ரிக் ஹிட் அடிப்பார் என நினைத்துக் கொண்டு இருந்த போது கோப்ரா படம் சொதப்பியது. இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கடும் தோல்வியைச் சந்தித்தது.

demante colony 2 ajay gananmuthu ajay gananmuthu marriage

இந்தப் படம் படு தோல்வியைச் சந்தித்த பின்னர், டிமான்ட்டி காலணி 2 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருபடத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதால், ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகுமா என்று பல கேள்விகள் இருந்தது. ஆனால் அவர் அதற்கும் தனது இரண்டாம் பாகத்தில் ஒரு காட்சி வைத்து அசத்தினார். படம் தாறுமாறாக ஓடி பெரும் வெற்றிப் படமாக மாறியது.

demante colony 2 ajay gananmuthu ajay gananmuthu marriage

நடிகர்கள்: அஜய் ஞானமுத்து கடந்த 19ஆம் தேதி, தனது காதலியும் கிராஃபிக் டிசைனருமான ஷிமோனாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக டிமான்ட்டி காலணி படக்குழுவினரான, அருள்நிதி, பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் விக்ரம், அதர்வா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆதிக் ரவிச்சந்திரன், மகிழ் திருமேனி உள்ளிட்டோரும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

demante colony 2 ajay gananmuthu ajay gananmuthu marriage

அஜித்: அதேபோல் இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியும் திருமணத்தில் கலந்து கொண்டார். மேலும், அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அதேபோல் நடிகர் விஷால் திருமணம் முடிந்த பின்னர் அஜய் ஞானமுத்துவின் வீட்டிற்குச் சென்று மணமக்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

demante colony 2 ajay gananmuthu ajay gananmuthu marriage
demante colony 2 ajay gananmuthu ajay gananmuthu marriage

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X