twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்பு கொடுத்த புத்தாண்டு பார்ட்டி: த்ரிஷா வந்தாக, கார்த்தி வந்தாக இன்னும்...

    By Siva
    |

    சென்னை: சிம்பு கொடுத்த புத்தாண்டு பார்ட்டியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    2018ம் ஆண்டு சிம்புவுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. செக்கச் சிவந்த வானம் படத்தை பார்த்த அனைவரும் சிம்புவின் நடிப்பை பாராட்டினார்கள்.

    இந்நிலையில் சிம்பு புத்தாண்டையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.

    2018ம் ஆண்டின் அதிரடி வில்லன் யார் தெரியுமா.. வாங்க வாக்களியுங்க!

    த்ரிஷா

    த்ரிஷா

    சிம்பு கொடுத்த பார்ட்டியில் அவரின் தோழி த்ரிஷா கலந்து கொண்டார். திரையுலகில் உள்ள நல்ல நண்பர்களில் சிம்புவும் ஒருவர் என்று த்ரிஷா அடிக்கடி கூறுவார். சிம்பு இசையமைத்த பீர் பிரியாணி பாடலின் லிரிக்கல் வீடியோவை த்ரிஷா தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கார்த்தி

    கார்த்தி

    சிம்பு பார்ட்டியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். 2015ம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது சிம்பு, கார்த்தி இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் ராசியாகிவிட்டார்கள்.

     சுந்தர் சி.

    சுந்தர் சி.

    வந்தா ராஜாவாதான் வருவேன் பட இயக்குனர் சுந்தர் சி.யும், மகத் ராகவேந்திராவும் சிம்பு கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். சிம்பு பார்ட்டியில் மகத் இல்லாமலா?

    காயத்ரி

    காயத்ரி

    பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி ஆகியோரும் பார்ட்டிக்கு வந்து சிம்புவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

     சோனியா அகர்வால்

    சோனியா அகர்வால்

    சிம்புவுடன் சேர்ந்து கோவில் படத்தில் நடித்த சோனியா அகர்வாலும் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

     வெங்கட்பிரபு

    வெங்கட்பிரபு

    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை அடுத்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

     மேகா ஆகாஷ்

    மேகா ஆகாஷ்

    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் மேகா ஆகாஷும் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

     ஹரிஷ் கல்யாண்

    ஹரிஷ் கல்யாண்

    சிம்புவின் நண்பரும், தீவிர ரசிகருமான ஹரிஷ் கல்யாண் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

    English summary
    Kollywood celebs attend the new year bash thrown by Simbu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X