வரிசையில் நின்று வாக்களித்த நடிகர்கள் பிரசன்னா, ஜீவா, செந்தில்

By Siva

சென்னை: நடிகர், நடிகைகளில் பலர் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தாரும் வாக்களித்தனர்.

பிரசன்னா

பிரசன்னா

நடிகர் பிரசன்னா வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

ஜீவா

ஜீவா

நடிகர் ஜீவா சென்னையில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

செந்தில்

செந்தில்

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த நடிகர் செந்தில் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

விசாகா சிங்

விசாகா சிங்

ஒரு ஊருல ரெண்டு ராஜா படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகை விசாகா சிங் இயக்குனரிடம் அனுமதி பெற்று மும்பை சென்று வாக்களித்தார்.

மனோபாலா

மனோபாலா

நகைச்சுவை நடிகர் மனோபாலா வாக்குப்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே வாக்களித்துவிட்டு மை படிந்த விரலை போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்டுவிட்டார்.

நீலிமா

நீலிமா

நடிகை நீலிமா இன்று காலை வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது இரண்டு மகள்களும் முதல் முறையாக வாக்களித்த பிறகு மை படிந்த அவர்களின் விரல்களை போட்டோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நாசர்

நாசர்

நடிகர் நாசர் சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார்.

ஹன்சிகா

ஹன்சிகா

நடிகை ஹன்சிகா தனது சகோதரர் பிரஷாந்த் மோத்வானியுடன் சென்று வாக்களித்துள்ளார். மேலும் அனைவரையும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜீவன்

ஜீவன்

நடிகர் ஜீவன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சிவகுமார்

சிவகுமார்

நடிகர் சிவகுமார் சென்னை தி. நகரில் உள்ள இந்து பிரச்சார சபாவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஹரி

ஹரி

இயக்குனர் ஹரி தனது மனைவி ப்ரீத்தாவுடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றார்.

ஹாரிஸ்

ஹாரிஸ்

தல 55 படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் முறையாக தனது வாக்கை பதிவு செய்தார்.

விவேக்

விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் வாக்களித்ததோடு மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அனிருத்

அனிருத்

கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் வாக்களித்துள்ளார்.

கௌதம்

கௌதம்

இயக்குனர் கௌதம் மேனன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடன் வந்து வாக்களித்தார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

காமெடி மற்றும் மாஸ் நடிகரான சிவகார்த்திகேயன் வாக்களித்துவிட்டு மை படிந்த விரலுடன் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு

விஷ்ணு

நடிகர் விஷ்ணு தனது மனைவி ரஜினியுடன் வந்து வாக்களித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

விமல்

விமல்

நடிகர் விமல் சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

த்ரிஷா

த்ரிஷா

நடிகை த்ரிஷா மற்றும் அவரது அம்மா உமா ஆகியோர் மதியம் 2.30 மணிக்கு சென்னை டிடிகே சாலையில் உள்ள புனித சேவியர் பள்ளியில் வாக்களித்தார்.

கார்த்தி

கார்த்தி

நடிகர் கார்த்தி தி. நகரில் உள்ள இந்து பிரச்சார சபாவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வைரமுத்து

வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

விஷால்

விஷால்

நடிகர் விஷால் சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மாள் கல்லூரியில் வாக்களித்தார்.

சினேகா

சினேகா

நடிகை சினேகா தி.நகரில் உள்ள ஜிஆர்டி கன்வென்ஷன் சென்டர் அருகில் இருக்கும் கார்பரஷேன் பள்ளியில் மதியம் 12 மணிக்கு வாக்களித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X