Surgical Strike 2: அடின்னா இது அடி.. இந்திய விமானப்படையை பாராட்டிய கமல், பிரசன்னா, திரு
Recommended Video

சென்னை: புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படையை திரையுலக பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையை சேர்ந்த 12 மிராஜ் விமானங்கள் பாகிஸ்தானுக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்திய விமானப்படை தாக்கிய பாலகோட் பகுதி தீவிரவாதி ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த அப்போத்தாபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமல் ஹாஸன்
பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை தாக்கிவிட்டு 12 விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளன. அந்த ஹீரோக்களை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது. அவர்கள் வீரத்திற்கு சல்யூட் என்று கமல் ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.
பிரசன்னா
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படையை வாழ்த்தியுள்ளார் நடிகர் பிரசன்னா.
சதீஷ்
42 பேர் ஆத்மா சாந்தி அடையட்டும்🙏🏻#SurgicalStrike2 #இந்தியாபதிலடி #JaiHind என்கிறார் நடிகர் சதீஷ்.
திரு
சரியான பதிலடி. இந்திய விமானப்படைக்கு ஹாட்ஸ் ஆஃப் என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் திரு.


Click it and Unblock the Notifications











