ரகுராம் மாஸ்டரின் உடலுக்கு ரஜினி, கமல், கே. பாலசந்தர், விவேக், நமீதா அஞ்சலி

By Siva

சென்னை: மாரடைப்பால் மரணம் அடைந்த நடன இயக்குனர் ரகுராமின் உடலுக்கு ரஜினிகாந்த், கே. பாலசந்தர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் நேற்று காலை 11.45 மணிக்கு மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர்.

இயக்குனர் கே. பாலசந்தரின் பல படங்களுக்கு இவர் தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரஜினி

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகுராம் மாஸ்டரின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கமல்

கமல்

ரகுராம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமலை பார்த்து அழும் சுஜா ரகுராம்.

பாலசந்தர்

பாலசந்தர்

தனது படங்களில் பெரும்பாலானவற்றுக்கு நடனம் அமைத்து கொடுத்த ரகுராமின் உடலுக்கு இயக்குனர் கே. பாலசந்தர் அஞ்சலி செலுத்தினார்.

ராதிகா

ராதிகா

நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் மனோபாலா ஆகியோர் ரகுராம் மாஸ்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விவேக்

விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் ரகுராம் மாஸ்டரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நமீதா

நமீதா

நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகை நமீதா ஆகியோர் ரகுராமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X