Don't Miss!
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு: புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்
Recommended Video
சென்னை: பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அருமையாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த கேப்டன் தோனியை தமிழ் திரையுலக பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதிய ஐபிஎல் போட்டி நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
இந்த போட்டியில் தோனி விஸ்வரூபம் எடுத்து விளையாடியதால் சென்னை அணி வெற்றி பெற்றது. தோனியின் ஆட்டத்தை பார்த்தவர்களால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
|
வெங்கட் பிரபு
தோனியின் அபார ஆட்டத்தை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு என்ன ஒரு வெற்றி, என்ன ஒரு மேட்ச், தல தோனி, ராயுடு என்ன ஒரு இன்னிங்ஸ் என்று நெகிழ்ந்து ட்வீட்டியுள்ளார்.
|
விஷ்ணு விஷால்
அருமையான மேட்ச். தோனி, என் நண்பன் ராயுடுவின் ஆட்டம் அபாரம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
|
சுசீந்திரன்
தோனி செம என்று இயக்குனர் சுசீந்திரன் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
|
பாராட்டு
யாருப்பா சொன்ன off side போட்டா தலைவன் தடுமாறுவான்னு. கடைசி சிக்சர் பார்த்தீரல்லோ. எல்லா சைடும் அவன் சைடு தான் என்கிறார் நீயா நானா புகழ் கோபிநாத்.
|
கேப்டன்
தோனியின் சூப்பர் ஆட்டத்தை பார்த்த நடிகை சஞ்சனா அவரை புகழ்ந்து தள்ளி ட்வீட்டியுள்ளார்.
|
தயாநிதி
வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு என்று தோனியை புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.