twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்க ஹீரோ நீங்க தான் அபிநந்தன், சீக்கிரம் திரும்பி வாங்க: சூர்யா, விஷால் உருக்கம்

    By Siva
    |

    Recommended Video

    இந்திய விமானி அபிநந்தனுக்காக பிராத்தனை செய்யும் பிரபலங்கள்- வீடியோ

    சென்னை: பாகிஸ்தானியர்களிடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் நேற்று சிக்கினார். அவர் தங்கள் வசம் உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானியர்களிடம் சிக்கினாலும் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார் அபிநந்தன். அவரின் வீரத்தை பார்த்து இந்தியர்கள் பெருமைப்படுகிறார்கள். அவர் பத்திரமாக நாடு திரும்ப அனைத்து இந்தியர்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சூர்யா

    அபிநந்தனை நினைத்து பெருமைப்படுவதாகவும், அவர் பத்திரமாக நாடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா.

    விவேக்

    எப்பாடு பட்டாவது விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்பாக மீட்டு வரல் வேண்டும் என்பதே நம் இறைஞ்சல். POW எனப்படும் போர் வீரனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்பது விதி. ஆனால் அங்கு அது நடக்காதோ என்பதே நம் அச்சம் என்று ட்வீட்டியுள்ளார் விவேக்.

    விஷால்

    என் ஹீரோ அபிநந்தனுக்கு சல்யூட். அவர் வீரம், நம்பிக்கையின் முன்னுதாரணம். இந்திய விமானப்படை விமானிகள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்குகிறேன். நம் நாட்டை இரவு, பகலாக காப்பதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் விஷால்.

    குஷ்பு

    பாகிஸ்தானிடம் சிக்கிய போதிலும் அமைதியாகவும், வீரமாகவும் நடந்து கொண்டிருக்கும் அபிநந்தனை பார்த்து குஷ்பு பெருமைப்பட்டுள்ளார். அவர் மட்டும் அல்ல நாடே பெருமைப்படுகிறது.

    LKG: சபாஷ் ஆர்ஜே பாலாஜி... எல்கேஜி பட லாபத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் பாருங்க! LKG: சபாஷ் ஆர்ஜே பாலாஜி... எல்கேஜி பட லாபத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் பாருங்க!

    English summary
    Kollywood celebs are so proud of wing commander Abhinandan's boldness and pray for his safe return.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X