நேசமணிக்கு ஆபரேஷன் செய்யும் ஆரவ்: பார்த்து மருத்துவ முத்தம் கொடுத்துடாதீங்க

By Siva

Recommended Video

#Pray_For_Nesamani நேசமணி கதாபாத்திரம் குறித்து வடிவேலு கருத்து- வீடியோ

சென்னை:நேசமணி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் ஆரவ்.

கான்டிராக்டர் நேசமணி தலையில் சுத்தியல் விழுந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுடன் சேர்ந்து திரையுலக பிரபலங்களும் நேசமணி பற்றி காமெடியாக ட்வீட் போடுகிறார்கள்.

Kollywood celebs pray for Nesamani

அப்பலோ மருத்துவமனையில் இருக்கும் நேசமணியை பார்க்க அவரின் இரட்டை சகோதரரான பில்டிங் கான்டிராக்டரான சுடலைமுத்து துபாயில் இருந்து நாடு திரும்பியுள்ளார் என்று ட்வீட் போட்டுள்ளார் எடிட்டர் சுரேஷ். சுடலைமுத்து நாடு திரும்பியுள்ள நிலையில் நேசமணி விரைவில் குணமடைய அவரின் சகோதரர் பிச்சுமணி கோவிலில் 1008 முறை மணி அடிக்கிறாராம்.


நேசமணி பற்றி ஆரவ் ட்வீட் மேல் ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார். நேசமணி தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆரவ் விரைவில் நீதி கிடைக்க இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மருத்துவமனையில் நேசமணியை பார்த்ததாகவும் அவரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், விரைவில் புகைப்படங்களை வெளியிடுவதாகவும் கலாய்த்துள்ளார் ஆரவ்.


நேசமணியை காப்பாற்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்வதாகவும் ட்வீட் செய்துள்ளார் ஆரவ். பார்த்து ஆரவ், மருத்துவ முத்தம் கொடுத்துவிடப் போகிறீர்கள்.


நேசமணி ட்விட்டரில் டிரெண்டாவதை பார்த்த இயக்குநரும், நடிகருமான சேரனோ, #Nesamani
இந்த ஊர்லலாம் என்னடா டிரஸ் போடுறீங்க ..
போட்டா இந்த நேசமணி மாதிரி போடுங்கடா...
நம்மெல்லாம் துபாய்ல காஸ்டியூம் டிசைனர் தெரியும்ல.... என்று அவர் பங்கிற்கு கலாய்த்துள்ளார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேசமணி 2 இட்லியும், கலக்கியும் சாப்பிட்டதாக வெளியான அறிக்கையை பார்த்து கமெண்ட் போட்ட நடிகர் சாந்தனு பயத்தில் தவறுதலாக எழுதிவிட்டார். நேசமணிக்கு என்னாகுமோ, ஏதாகுமோ என்று திரையுலக பிரபலங்கள் கவலையில் உள்ளனர். இருக்காதா பின்ன, நேசமணியை அவர்களுக்கும் பிடிக்கும் அல்லவா.


தமிழக மக்களும், திரையுலக பிரபலங்களும் நேசமணி விரைவில் குணமடைய வேண்டும், அவர் மீதான கொலை முயற்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ட்வீட் செய்ய பிற மாநில மக்களோ, டேய் யாருய்யா அந்த நேசமணி, என்ன தான் செய்தார், என்ன பேசுகிறீர்கள் என்றே புரியவில்லையே என்று கடுப்பாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, டிரெண்டில் மோடியையே பின்னுக்குத் தள்ளியுள்ள அந்த நேசமணியை எங்களுக்கே பார்க்கணும் போல இருக்கே என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X