Jyotika Daughter: ஜோதிகாவை இயக்க பிளான் போடும் தியா? விஜய் மகனுக்கு கிடைத்ததைப் போல அது அமையுமா?
சென்னை: நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா தம்பதியரின் மகள் தியா. இவர் நேற்று அதாவது மே 30ஆம் தேதி தனது உயர்கல்வியை மும்பையில் முடித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது பலரும் தியாவின் அடுத்த பிளான் என்ன என்ற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள். தியா டைரக்ஷனைத்தான் தேர்வு செய்வர் என்று முடிவு செய்துகொண்ட பலரும் தியாவின் முதல் படம் அப்பாவுக்கா? அல்லது அம்மாவுக்கா? அல்லது சித்தப்பாவுக்கா என்ற கேள்வியை பலரும் முன் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் திரைத்துறையில் தற்போது தியா குறித்து சில செய்திகள் அடிபட்டு வருகிறது.
தியா தான் படிக்கும் போது தனது படிப்பின் ஒரு பகுதியாக ஆவணப்படம் ஒன்று இயக்கியிருந்தார். லீடிங் லைட் என்ற அந்த ஆவணப்படம் மாணவர்களுக்கு இடையிலான போட்டியில், மொத்தம் மூன்று விருதுகளை வென்றது. அதாவது சிறந்த திரைக்கதை, நடுவர்களின் சிறப்பு விருது மற்றும் சிறந்த குறும்படம் என மூன்று விருதுகளை வென்றது. தியா இயக்கிய ஆவணப்படம் மூன்று விருதுகளை வென்றதால் அவர் மீது அப்போது இருந்தே திரைத்துறையினர் கவனம் விழத் தொடங்கியது. இப்படியான நிலையில் தியா தனது உயர்கல்வியை முடித்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

விஜய் மகன்: இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் சூர்யாவின் மகள் தியாவை ஒப்பிட்டு வருகிறார்கள். அதாவது ஜேசன் சஞ்சய் வெளிநாட்டிற்குச் சென்று சினிமாதுறை குறித்து படித்துவிட்டு வந்தார். தற்போது லைகா தயாரிப்பில் நடிகர் சந்தீப் கிஷனை வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன் வந்ததற்கு காரணமே, லைகாவின் முதல் படத்தில் நடித்து லைகாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் விஜய். அதனால்தான் லைகா நிறுவனம் தானாக முன் வந்து படத்தை தயாரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
சூர்யா மகள்: இந்நிலையில் சூர்யாவின் மகள் தியா தனது படிப்பை முடித்து விட்டதால் அடுத்ததாக விஜய் மகன் போல நேரடியாக இயக்குநராக களமிறங்குவாரா? அல்லது யாரிடமாவது உதவி இயக்குநராக பணிபுரிந்து விட்டு, தனது முதல் படத்தை இயக்குவாரா என்ற கேள்வியை பலரும் கேட்டு வருகிறார்கள். மேலும் தியா நேரடியாக படத்தை இயக்கினாலும், அவர் தனது அம்மா ஜோதிகாவை வைத்துதான் படங்கள் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

பெண் கதாபாத்திரம்: இதற்கு காரணமாக திரைத்துறையில் கூறப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால், தியா தனது படிப்பிற்காக இயக்கிய ஆவணப்படத்தில் திரைத்துறையில் உள்ள பெண் டெக்னிஷியர்கள் குறித்து எடுத்திருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது. இதனால் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தியா படமெடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறி வருகிறார்கள். இதனால் அதில் ஜோதிகாவை நடிக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து தியா எப்போது படம் இயக்குவார் என்ற கேள்வி மொத்த திரையுலகத்திற்கும் உள்ளது என்பது மட்டும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











