திருப்பதியில் வரிசையில் நின்று சாமி தரிசனம்.. வாழ்த்து சொன்ன ரசிகை.. நன்றி கூறிய நயன்தாரா!

சென்னை : தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஜூன் 9ம் தேதியான நேற்று மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

Recommended Video

Nayanthara Wedding | திருப்பதி கல்யாண உற்சவத்தில் Wikki-Nayan *Celebrity |Filmibeat Tamil

நேற்று திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதியர் இன்று திருப்பதியில் வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா.

ஏழு ஆண்டு காதல்

ஏழு ஆண்டு காதல்

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ்சிவனுக்கும் நயன்தாராவுக்கு இடையே காதல் மலர்ந்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். நயனும், விக்கியும் பல இடங்களுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். க்யூட் காதல் ஜோடியான இவர்களை பார்க்கும் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி எப்போது திருமணம் என்பதுதான். இந்த காதல் ஜோடியின் திருமணத்தைக்கான ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள் பலரும் காத்திருந்தனர்.

நிச்சயதார்த்தம் முடிந்தது

நிச்சயதார்த்தம் முடிந்தது

இதையடுத்து, கடந்த ஆண்டு வெளியான நெற்றிக்கண் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா. உறவினர்கள் முன்னிலையில் விக்கியுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஜூன்9ந் தேதி திருமணம்

ஜூன்9ந் தேதி திருமணம்

இதையடுத்து, திருமண தேதியை எப்போது அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஜூன்9ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறுமான அறிவிக்கப்பட்டது. ஆனால், திருப்பதியில் திருமணம் நடைபெற்றால் விஐபிக்கள் கலந்து கொள்ள முடியாது என்பதால் திருமண இடம் மாற்றப்பட்டது.

கோலாகல திருமணம்

கோலாகல திருமணம்

மகாபலிபுரம் கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஓட்டலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 80க்கும் மேற்பட்ட பவுசர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஒட்டுமொத்த திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

வரிசையில் இன்று சாமி தரிசனம்

வரிசையில் இன்று சாமி தரிசனம்

நேற்று திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதியர் இன்று திருப்பதியில் வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு நாள்தோறும் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நயன்தாராவின் தீவிர ரசிகை ஒருவர் நயன்தாராவுக்கு திருமண வாழ்த்து கூற, நயன்தாராவும் பதிலுக்கு அந்த ரசிகைக்கு நன்றி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X