ஹாலிவுட்டா.. கோலிவுட்டா.. கிரியேட்டர்களின் புது முயற்சி... டிரெண்டாகும் போஸ்டர் !

சென்னை : சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கம் உலகையே வீட்டில் கட்டி போட்டிருக்கிறது . டெக்னாலஜி வளர்ச்சியால் பலர் தங்களின் திறமைகளை காட்டி வருகின்றனர்.

அதில், சில கிரியேட்டர்கள் ஹாலிவுட் சினிமாவிற்கும் தமிழ் சினிமாவிற்கும் லிங்க் கொடுத்து போஸ்டர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

டிரைன் டூ பூஸான் என்கிற ஜோம்பி படத்திற்கு நயன்தாராவின் இமைக்கா நொடிகள் என்ற தலைப்பு சரியாக பொருந்தியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் ஒரு நாடே ஜோம்யின் ஆதிக்கத்திற்குள் சென்று விடும். பூஸானுக்கு செல்லும் டிரைனில் இருந்து சிலர் தப்பிக்கின்றனர். கண் இமைக்காமல் ரசிகர்களை பார்க்க வைத்து உலகம் முழுவதும் பெரிய வெற்றி கண்ட படம் இது .

 எதிரிகளை வேட்டையாடு

எதிரிகளை வேட்டையாடு

கமலின் ஸ்டைலுக்கு ஈடு இணை ஏது ஆனால் கமலுக்கே ஒரு புது லுக்கை தந்த படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தின் தலைப்பை ஜான் விக் படத்திற்கு கொடுத்துள்ளனர். ஒரு சிறிய புள்ளியில் ஆரம்பித்து பெரிய அளவில் கொலைகளை செய்து அசத்தும் நாயகன் படம் முழுக்க எதிரிகளை வேட்டையாடி விளையாடுவார் .

 நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

தமிழில் ஒரு முக்கிய படம் ரஜினியும் கமலும் இணைந்து அசத்தியிருக்கும் படம். இந்த பட தலைப்பை ஒன்ஸ் அப்பான்ன டைம் இன் ஹாலிவுட் படத்திற்கு வைத்து போஸ்டரை உருவாக்கியுள்ளனர். நினைத்தாலே இனிக்கும் தலைப்புக்கும் இந்த படத்திற்கும் பெரிய பொருத்தம் இல்லை ஆனால் ஹாலிவுட்டின் ஜாம்பவான்கள் என்று சொல்ல கூடிய பிராட் பிட் மற்றும் லியோனர்டோ டீகேப்ரியோ இணைந்து நடித்த படம் என்பதால் இங்கு ரஜினி கமல் இணைந்து அசத்திய நினைத்தாலே இனிக்கும் படத்தில் இணைந்தனர்

 நான் மகான் அல்ல

நான் மகான் அல்ல

தமிழில் கார்த்திக்கு பெரிய வெற்றி படம் உலக புகழ் பெற்ற ஜோக்கர் படத்திற்கு சரியாக பொருந்தியுள்ளது. ஜோக்கரின் வாழ்க்கை கதை பல தீயவர்களினால் திசை மாறும் இதே தான் கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் நடக்கும் இதனாலே இந்த ஜோக்கர் படத்திற்கு சரியாக பொருந்தியது தலைப்பு .

 யாவரும் நலம்

யாவரும் நலம்

ஒரு வீட்டிற்குள் நடக்கும் அமானுஷ்யம் தான் மாதவனின் யாவரும் நலம். இந்த தலைப்பை இந்த வருடம் ஆஸ்கார்களை குவித்த பேராசைட் படத்திற்கு வைத்துள்ளனர். இரு படத்தின் கரு வேறு என்றாலும் ஒரே வீட்டை சுற்றி நடக்கும் கதை கிரியேட்டர்களை இந்த பார்வையில் இணைத்து போஸ்டராக்கி இருக்கிறது . டெக்னாலஜியை கையில் வைத்துள்ள இளைஞர்கள் வீட்டில் இருந்த படியே தங்களின் திறமைகளை காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X