twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்!

    பாலிவுட் படங்களை கோலிவுட்டில் ரீமேக் செய்து வந்த காலம் மாறி தற்போது, பாலிவுட் படங்களை இயக்கி வருகின்றனர் கோலிவுட் இயக்குநர்கள்.

    |

    சென்னை: கோடம்பாக்கத்தில் இருந்து மும்பைக்கு பறக்கத் தொடங்கி விட்டார்கள் தமிழ் இயக்குநர்கள்.

    ஏ.ஆர். முருகதாஸை தொடர்ந்து, பா. ரஞ்சித், ராகவா லாரன்ஸ், பிரபுதேவா, அட்லி மற்றும் புஷ்கர் காயத்ரி என பல இயக்குநர்கள் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை இயக்கி வருகின்றனர்.

    பட்டு வேட்டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி!பட்டு வேட்டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி!

    கோலிவுட் டு பாலிவுட்

    கோலிவுட் டு பாலிவுட்

    எம்.ஜி.ஆர் - சிவாஜி, கமல் - ரஜினி காலத்தில் பாலிவுட்டில் வெளியான பிரபல படங்களை தமிழில் ரீமேக் செய்து இங்குள்ள இயக்குநர்கள் வெற்றிப்படங்களை கொடுத்து வந்தனர்.

    ஆனால், தற்போது, தமிழில் பல வெற்றி படங்கள் வெளியாகி வரும் நிலையில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் பார்வை கோலிவுட் இயக்குநர்களை மும்பைக்கு கடத்தியுள்ளது.

    முருகதாஸ் போட்ட ரூட்டு

    முருகதாஸ் போட்ட ரூட்டு

    ஆரம்ப கால கட்டத்தில் சில பல கமல் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு இருந்தாலும், சூர்யாவின் கஜினி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் ஆமிர்கானை வைத்து எடுத்த கஜினி படம் தான் கோலிவுட் இயக்குநர்களை இந்தியளவில் அடையாளப்படுத்தியது.

    அவரது வழியில் தற்போது பல இயக்குநர்கள் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு படையெடுக்க கிளம்பி உள்ளனர்.

    பிரபுதேவா, லாரன்ஸ்

    பிரபுதேவா, லாரன்ஸ்

    நடன இயக்குநர்களாக இருந்து இயக்குநர்களாக கலக்கி வரும் பிரபுதேவா, சல்மான் கானின் தபங் 3 படத்தை இயக்கி வருகிறார். இவர், ஏற்கனவே சில பாலிவுட் படங்களை இயக்கி வெற்றி அடைந்துள்ளார்.

    காஞ்சனா படங்களின் வெற்றிக்கு கிடைத்த ஜாக்பாட்டாக, லாரன்ஸ் மாஸ்டர் பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரை வைத்து லக்‌ஷ்மி பாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    ரஜினியால் கிடைத்த அங்கீகாரம்

    ரஜினியால் கிடைத்த அங்கீகாரம்

    அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா. ரஞ்சித்துக்கு ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியை வைத்து இரு படங்களை இயக்கிய பா. ரஞ்சித்துக்கு இந்தியளவில் அங்கீகாரம் கிடைத்தது.

    அந்த அங்கீகாரத்தை கொண்டு தற்போது பாலிவுட்டில் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி வருகிறார்.

    விக்ரம் வேதா வெற்றி

    விக்ரம் வேதா வெற்றி

    புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம், இந்திய சினிமாவையே அதன் திரைக்கதைக்காக திரும்பி பார்க்க வைத்தது.

    இந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய ஷாரூக்கான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்தது.

    ஆனால், தற்போது, ஆஸ்கர் விருது வென்ற ஃபாரஸ்ட் கம்ப் படத்தை ஆமிர்கான் ரீமேக் செய்யவுள்ளதாகவும், அந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த படத்தில், முக்கியமான வேடத்தில் விஜய் சேதுபதியும் காமெடி கதாபாத்திரத்தில் யோகிபாபுவையும் பாலிவுட் அழைத்துச் செல்ல புஷ்கர் காயத்ரி முடிவு செய்துள்ளனராம்.

    மெர்சல் தந்த வாய்ப்பு

    மெர்சல் தந்த வாய்ப்பு

    பிகில் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே அட்லிக்கு ஷாரூக்கான் மூலமாக பாலிவுட் கதவு திறந்துள்ளது. தெறி மற்றும் மெர்சல் படங்களின் வெற்றியை கவனித்து வந்த ஷாரூக்கான், அந்த இரு படங்களில் ஏதாவது ஒன்றை ரீமேக் செய்து நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதன்மூலமாக அட்லியும் மும்பைக்கு தனது மனைவியுடன் சேர்த்து இரண்டு டிக்கெட் எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

    English summary
    Kollywood directors like AR Murugadoss, Pa Ranjith, Prabhudeva, Raghava Lawrence, Atlee and Pushkar Gayathri duo are started ruling in Bollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X