K Town Divorces: தனுஷ், சமந்தா, ரஹ்மான், விஜய்… ரசிகர்களை கவலை அடைய வைத்த கோலிவுட் விவாகரத்துகள்
சென்னை: ரசிகர்களை பொறுத்தவரையில் தங்களுக்கு அபிமான பிரபலங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அது அவர்களுக்கே நேர்ந்தது என்று நினைத்து அதற்கான எண்ணங்களை வெளிப்படுத்தி வருவார்கள். அப்படி இருக்கையில் தங்களது அபிமான பிரபலங்கள் வாழ்க்கையில் விவாகரத்து என்று நடந்தால் ரசிகர்கள் முற்றிலுமாக உடைந்தே போய்விடுகிறார்கள். அப்படி கோலிவுட் உலகில் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்துகள் குறித்து காணலாம்.
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு விவாகரத்திற்கு விண்ணப்பித்து விவாகரத்து பெற்றனர். 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

சமந்தா - நாக சைதன்யா: இந்த ஜோடி தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஜோடியாக இருந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியர், 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 4 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் முடிந்தது இவர்களின் காதல் திருமணம். ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த விவாகரத்துகளில் இதுவும் ஒன்று. இவர்கள் இருவருமே தற்போது மறுமணம் செய்து கொண்டனர்.
அமலா பால் - ஏ.எல். விஜய்: நடிகை அமலா பாலும் இயக்குநர் ஏ.எல். விஜய்யும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து 2017ஆம் ஆண்டு பிரிந்தனர். இவர்களின் காதல் திருமணம் 3 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவர்கள் இருவருமே தற்போது மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

இமான் - மோனிகா ரிச்சர்ட்: இசையமைப்பாளர் இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் தம்பதியர் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து, 2021ஆம் ஆண்டு பிரிந்தனர். இவர்கள் இருவரும் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். இவர்களின் விவாகரத்துக்கு காரணமே, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்னை மற்றும் மனஸ்தாபம் என்று இசையமைப்பாளர் இமான் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி: இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் பாடகி சைந்தவி என இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாகி, அதன் பின்னர் தம்பதியர்களாக உருவெடுத்தார்கள். அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2024ஆம் ஆண்டு பிரிந்தனர். 11 ஆண்டு கால இல்லற வாழ்க்கையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ரவி மோகன் - ஆர்த்தி ரவி: ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்துகளில் அவர்களின் விவாகரத்தும் ஒன்று. 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். அவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு சுமார் 15 ஆண்டு கால இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர். அவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - சைரா பானு: ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய விவாகரத்துகளில் இதுவும் ஒன்று. காரணம் இவர்கள் இருவரும் கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2024ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 30 ஆண்டு கால இல்லற வாழ்க்கையில் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
அதையடுத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விவாகரத்து தகவல் நடிகர் விஜய் - சங்கீதா தம்பதியரின் பிரிவு. இதில் மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், நடிகர் விஜய் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று சங்கீதா தெரிவித்துள்ளது தான். கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா என்று ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











