twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பைனான்சியர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் தமிழ் சினிமா

    |

    சென்னை: வட்டிக்கு வட்டி, அதற்கு குட்டி என்று தமிழ் சினிமாக்காரர்களை முடக்கிப் போட்டு பிழைத்துக் கொண்டிருக்கும் "சேட்"டுகளிடம் சிக்கி தமிழ் சினிமா இன்று நிலைகுலைந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ் சினிமா மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறுகிறார்கள். தமிழ் திரையுலகினர் அதிரடியான மாற்றங்களுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாவிட்டால் மிகப் பெரிய ஸ்தம்பிப்பு நிலையை தமிழ் சினிமா சந்திக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    கடன் கொடுத்து விட்டு வாங்க முடியவில்லை என்பது பைனான்சியர்களின் புலம்பல். தயாரிப்பாளர்களோ, வாங்கிய கடனை பட ரிலீஸுக்கு முன்பே கட்டுமாறு பைனான்சியர்கள் நெருக்குகிறார்கள் என்று புலம்புகிறார்கள்.

    கடன் தொகை காரணமாக பல படங்கள் பாதிக்கப்பட்டு முடங்கிப் போயுள்ளன. இனியும் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்க வேண்டுமா என்பது குறித்து யோசித்து வருவதாக பைனான்சியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    ரிலீஸுக்கு முன்பு சிக்கல்

    ரிலீஸுக்கு முன்பு சிக்கல்

    உச்ச நட்சத்திரங்கள் முதல் குட்டி ஸ்டார் வரை பலருடைய படங்களும் சமீப காலமாக பைனான்ஸ் பிரச்சினையால் பாதிப்பை சந்தித்து வருகின்றன. வாங்கிய கடனைக் கொடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று ரெட் கார்டு போடப்படும் படங்கள் அதிகரித்து வருகின்றன.

    12க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாதிப்பு

    12க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாதிப்பு

    இந்த ஆண்டு 12க்கும் மேற்பட்ட படங்களுக்கு இதுபோன்ற தொல்லை வந்தது. உத்தமவில்லின் பட ரிலீஸ் இப்படித்தான் தாமதமானது. வாலு படம் தள்ளிப் போய்க் கொண்டே வந்து இப்போது இடைக்காலத் தடையைச் சந்தித்துள்ளது.

    மாரிக்கும் வந்த சிக்கல்

    மாரிக்கும் வந்த சிக்கல்

    மாரி படத்திற்கும் கூட இதுபோன்ற சிக்கல் வந்து கடைசி நிமிடத்தில் பிரச்சினையை சரி செய்து தியேட்டர்களுக்கு அனுப்பி வைத்தனராம்.

    தயாரிப்பதற்குச் சும்மா இருக்கலாம்

    தயாரிப்பதற்குச் சும்மா இருக்கலாம்

    ஒரு முன்னணி தயாரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில், படத் தயாரிப்பை விட்ட பிறகுதான் எனது உடல் நலம் நன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் கடன் கொடுத்தவர்கள் இப்போது அந்தத் தொழிலில் ஈடுபடுவதில்லை.

    சம்பளம் அராஜக அதிகம்

    சம்பளம் அராஜக அதிகம்

    நடிகர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் அதிக அளவிலான சம்பளம் இருப்பதே பிரச்சினைக்கு முக்கிய காரணம். தயாரிப்புச் செலவும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. படங்கள் ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயம் என்ற நிலை வேறு என்றார்.

    கடன் கொடுக்கத் தயங்கும் பைனான்சியர்கள்

    கடன் கொடுக்கத் தயங்கும் பைனான்சியர்கள்

    மறுபக்கம், இனியும் தமிழ்ப் படங்களுக்கு கடன் கொடுப்பதை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளனராம் பைனான்சியர்கள். கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்குவது பெரும் சிக்கலாகி வருவதால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனராம்.

    வட்டி ஜாஸ்தி

    வட்டி ஜாஸ்தி

    வங்கிகளில் கடன் வாங்குவதை விட இதுபோன்ற தனியார் வட்டிக் கடைக்காரர்களிடம்தான் பெரும்பாலான சினிமாக்காரர்கள் கடன் வாங்குவார்கள். கேட்ட பணம் கிடைக்கும், வட்டி ஜாஸ்தியாக இருந்தாலும் என்பதால்.

    ஹீரோக்கள் அட்டகாசம்

    ஹீரோக்கள் அட்டகாசம்

    இப்படி அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் தயாரிப்பும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய ஹீரோக்களால்தான் பெரும்பாலும் சிக்கல் வருகிறதாம். சமீபத்தில் ஒரு முக்கிய கதாநாயகன், தனது சம்பளத்தில் 75 சதவீதத்தை முன்கூட்டியே தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்க, தயாரிப்பாளர் வேறு வழியில்லாமல் மிகப் பெரிய வட்டிக்குக் கடன் வாங்கி நிலைமையை சமாளித்தாராம்.

    படம் போண்டி.. தயாரிப்பாளர் காலி

    படம் போண்டி.. தயாரிப்பாளர் காலி

    ஆனால் படம் போண்டியாகி விட்டது. ஹீரோவிடம் போய் பணத்தைத் திரும்பக் கேட்க முடியாது. கடைசியில் இப்போது அந்தத் தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துள்ளாராம்.

    தெலுங்குப் படவுலகம் போல

    தெலுங்குப் படவுலகம் போல

    தமிழ்த் திரையுலகில்தான் இந்த நிலை. தெலுங்கு, இந்தி போன்றவற்றில் வேறு மாதிரி உள்ளனர். ஷாருக் கான் படம் வெளியிடுவதற்கு முன்பு டோக்கன் அட்வான்ஸ் போல சம்பளம் பெறுகிறார். வெளியானதும் லாபத்திற்கேற்ப சம்பளத்தைப் பெறுகிறாராம். தெலுங்கிலும் அப்படித்தான்.

    பாகுபலி பிரபாஸ்

    பாகுபலி பிரபாஸ்

    பாகுபலி படத்தின் நாயகனான பிரபாஸ் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பாகுபலி உரிமையை தனது சம்பளத்திற்குப் பதில் வாங்கியிருந்தாராம். 3 வருடமாக படத்தில் சம்பளமே வாங்காமல் வேலை பார்த்தார். இப்போது கிட்டத்தட்ட ரூ. 25 கோடியை விநியோகத்தின் மூலம் அறுவடை செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

    தமிழில்தான் அநியாயம்

    தமிழில்தான் அநியாயம்

    ஆனால் தமிழில்தான் அநியாயத்திற்கு சம்பளம் வாங்குவதாக சொல்கிறார்கள். 2 படம் ஓடி விட்டால் போதும் கோடிகளில் சம்பளம் கேட்கிறார்களாம் ஹீரோக்கள். அனைவருமே படம் வெளியிடுவதற்கு முன்பே சம்பளம் தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். லாப அடிப்படையில் யாரும் சம்பளம் பெற தயாராக இல்லை.

    கடன் வாங்கும் கட்டாயம்

    கடன் வாங்கும் கட்டாயம்

    நிலைமை இப்படி இருப்பதால்தான் பெரிய அளவில் கடன் வாங்கும் நிலைக்கு தயாரிப்பாளர் போகிறார். அதைக் கட்ட முடியாமல், படம் வெளியிடுவது தாமதமாகிறது.

    திருத்தம் அவசியம்

    திருத்தம் அவசியம்

    படங்களுக்காக தாறுமாறாக செலவிடுவதை நிறுத்த வேண்டும். அதிக தொகையை கடனாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். தயாரிப்புச் செலவில் ஒழுங்கு கொண்டு வரப்பட வேண்டும். நடிகர், நடிகையரின் சம்பளம் வெகுவாக குறைக்கப்பட வேண்டும். புதிய நடிகர்களுக்கு சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கமே நிர்ணயிக்க வேண்டும். பைனான்சியர்களால் நெருக்கடி வரும்போது அத்தனை பேரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட தயாரிப்பாளருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.

    லாப அடிப்படையில் சம்பளம்

    லாப அடிப்படையில் சம்பளம்

    நடிகர், நடிகையர்களுக்கு முதலில் டோக்கன் அட்வான்ஸ், படம் வெளியான பிறகு லாபத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது அமலுக்கு வர வேண்டும். பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தேவையான நிதி முதலீட்டில் பெரிய நடிகர்களும் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும். இதுபோல பல்வேறு திருத்தங்களைச் செய்தால்தான் தமிழ் சினிமா பிழைக்கும், இல்லாவிட்டால் கஷ்டம் என்கிறார்கள் திரையுலகப் பிரபலங்கள்.

    English summary
    Tamil Cinema is facing a big trouble from Financiers and the oldies urge the film persons to set correct them to escape from a meltdown.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X