காதலுக்கு மரியாதையுடன் பிரிந்த நட்சத்திர ஜோடிகள்... இவங்களாம் இந்த லிஸ்ட்லயே கிடையாதே!

சென்னை: திரைப்படங்களில் சேர்ந்து நடிக்கும் நடிகர்களும் நடிகைகளும் காதலிப்பது ரொம்பவே சகஜமானது.

அப்படி காதலித்த நட்சத்திர ஜோடிகள் பலர் பின்னாளில் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

அதேநேரம் சில ஜோடிகளின் காதல் பாதியிலேயே பிரேக் அப் ஆன கதைகளும் நடந்துள்ளன.

அந்த காதல் ஜோடிகளின் பட்டியலில் ரசிகர்களே எதிர்பார்க்காத நடிகர்களும் நடிகைகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Kollywood famous love breakup Actors and Actresses including Vijay Ajith Nayanthara

காதலுக்கு மரியாதை

தமிழ்த் திரையுலகில் கறுப்பு வெள்ளை காலம் முதலே நடிகர்கள், நடிகைகள் காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் வழக்கமாக காணப்படுகிறது. அதேநேரம் சில ஜோடிகள் பாதியிலேயே சில காரணங்களால் பிரிந்துவிட்டனர். அவர்களில் முக்கியமான நட்சத்திர ஜோடி என்றால் சிம்பு - நயன் இவர்களின் பெயர் இல்லாமல் இருக்காது. வல்லவன் படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கிய இந்த ஜோடி, பாதியிலேயே பிரிந்துவிட்டனர்.

 Kollywood famous love breakup Actors and Actresses including Vijay Ajith Nayanthara

பிரிந்த காதல் ஜோடிகள்

அதேபோல், பிரபுதேவா - நயன்தாரா காதலும் திரையுலகமே அறிந்த ஒன்றுதான். பிரபுதேவாவுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருந்த போதும், அவரை நயன் தீவிரமாக காதலித்து வந்தார். இறுதியாக இந்த ஜோடியும் பிரிந்தது, அதன் பின்னரே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஷால் - வரலட்சுமி சரத்குமார் காதலும் கோலிவுட்டையே கலங்கடித்தது. ஆனாலும், அவர்கள் காதல் திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே ட்ராப் ஆனது.

கார்த்தி - தமன்னா
பையா படத்தில் சேர்ந்து நடித்த போதே கார்த்தியும் தமன்னாவும் காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், சூர்யா - ஜோதிகா திருமணத்தால் சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவகுமார் கொஞ்சம் கடுப்பாக இருந்ததால், கார்த்தி தமன்னாவை பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் தோழா படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் சித்தார்த் - சமந்தா காதலும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர்களும் பாதியிலேயே தங்களது காதலை பிரேக் அப் செய்துகொண்டனர்.

 Kollywood famous love breakup Actors and Actresses including Vijay Ajith Nayanthara

விஜய் - அஜித் காதல்
முக்கியமாக விஜய், அஜித் இருவருமே தங்களது ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகைகளை காதலித்ததாக சொல்லப்பட்டது. விஜய்க்கும் சங்கவிக்கும் காதல் இருந்ததாகவும், அதன்பின்னர் கேரியரில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் சங்கவியை விஜய் பிரிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித் - ஹீரா காதல் கதையும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இவர்களும் பிரிந்துவிட அஜித் ஷாலினியை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X