ரசிகர்களை தியேட்டருக்கு சுண்டி இழுக்கும் 'ஆ': மகிழ்ச்சியில் படக்குழு
சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஆ பேய் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
கோலிவுட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வகையான படங்கள் பிடிக்கும். சில நேரம் மென்மையான காதல் கதை, சில நேரம் அதிரடி ஆக்ஷன் கதை கொண்ட படங்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். தற்போது பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான பேஸ் படம் தான் ஆ.

ஆ
ஓர் இரவு, அம்புலி 3டி ஆகிய படங்களை இயக்கிய ஹரிசங்கர், ஹரிஷ்நாராயணன் ஆகியோர் இயக்கியது தான் இந்த ஆ. அடடா நமக்கு பிடித்தது போன்று பேய் படம் வந்துவிட்டது என்று ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதிக அரங்குகள்
ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து கூடுதல் அரங்குகளில் ஆ படத்தை வெளியிட்டுள்ளனர்.

மகிழ்ச்சி
பாபி சிம்ஹா, கோகுல்நாத் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள அமோக வரவேற்பை பார்த்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெற்றி
ஆ படத்தின் சக்சஸ் மீட் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றி நல்ல விதமாக விமர்சனம் செய்த மீடியாக்களுக்கு படக்குழுவினர் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

ரசிகர்கள்
படத்தை பார்த்துவிட்டு செல்லும் ரசிகர்கள் அது பற்றி பிறரிடம் நல்லபடியாக சொல்வதை கேட்டு பலர் தியேட்டருக்கு வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











