மாஸ் காட்டும் ரீமேக்குகள்: யூடியூபை அதிர வைத்த நேர்கொண்ட பார்வை, ஆதித்ய வர்மா

By Siva

சென்னை: ரீமேக் படங்களான நேர்கொண்ட பார்வை மற்றும் ஆதித்ய வர்மா ஆகியவற்றின் ட்ரெய்லர் மற்றும் டீஸருக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தை தான் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ஹெச். வினோத்.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தை கிரிசாயா த்ருவ் விக்ரம், பனிடா சந்து உள்ளிட்டோரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

த்ருவ் விக்ரம்

ஆதித்ய வர்மா படத்தின் டீஸர் நேற்று வெளியானது. அந்த டீஸரில் நெருக்கமான காட்சி, முத்தக் காட்சி இருந்தபோதிலும் அவை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இல்லை. டீஸரை பார்த்தவர்கள் அனைவரும் த்ருவ் விக்ரமின் நடிப்பை பாராட்டியுள்ளனர். இந்நிலையில் டீஸர் வெளியான 24 மணிநேரத்தில் அதை யூடியூபில் 25 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். அறிமுக ஹீரோவின் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளதை பாராட்டியே ஆக வேண்டும்.

நேர்கொண்ட பார்வை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரை இதுவரை 1 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். பிங்க் படத்தை போன்று இல்லாமல் இந்த படத்தில் 2 சண்டை காட்சிகள் உள்ளன. அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இப்படி ஒரு மாற்றம் செய்துள்ளார் ஹெச். வினோத். ரீமேக் பட ட்ரெய்லருக்கே இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரீமேக்

ரீமேக்

தற்போது கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரீமேக் படங்கள் நேர்கொண்ட பார்வையும், ஆதித்ய வர்மாவும் தான். ஆதித்ய வர்மா படத்தை முதலில் இருந்து மீண்டும் எடுக்கப் போகிறோம் என்று அறிவித்தார்கள். சரி, இந்த படம் சரிபட்டு வராது என்று நினைத்தவர்கள் டீஸரை பார்த்து மிரண்டு தான் போனார்கள். பிங்க் மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்களை பார்த்துவிட்ட போதிலும் அதன் ரீமேக்குகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் அதிலும் குறிப்பாக ரசிகைகள் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவிகள். தெலுங்கு தெரியாவிட்டாலும் விஜய் தேவரகொண்டாவுக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை பல முறை பார்த்துவிட்டனர். இந்நிலையில் அவர்களை தன் நடிப்பால் ஈர்க்கும் பெரிய பொறுப்பு த்ருவுக்கு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X