இன்றைய ரிலீஸ்... மூடர் கூடம், மத்தாப்பூ, உன்னோடு ஒரு நாள்

By Shankar

இன்று வெள்ளிக்கிழமை மூன்று நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவை மூடர் கூடம், உன்னோடு ஒரு நாள் மற்றும் நாகராஜின் மத்தாப்பூ.

மூடர் கூடம்

மூடர் கூடம்

இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்துள்ளார். நவீன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். ஓவியா ஹீரோயினாக நடித்துள்ளார். நவீன், சென்ராயன் ஆகியோர் ஹீரோக்களாக நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

மத்தாப்பூ

மத்தாப்பூ

தொன்னூறுகளின் இறுதியில் தினந்தோறும் என்ற ஒரு நல்ல படம் தந்துவிட்டு, காணாமல் போன நாகராஜ் திரும்பி வந்திருக்கிறார், மத்தாப்பூ படம் மூலம். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் காயத்ரி, புதுமுகம் ஜெயன் நடித்துள்ளனர். வேலாயுதன் என்பவர் இசையமைத்துள்ளார். சபேஷ் முரளி பின்னணி இசை அமைத்துள்ளனர்.

உன்னோடு ஒரு நாள்

உன்னோடு ஒரு நாள்

புதுமுகங்கள் அர்ஜூன், நீலம் நடித்துள்ள படம் உன்னோடு ஒரு நாள். துரை கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள உன்னோடு ஒரு நாள். ஹீரோவும் அவர் நண்பனும் சேர்ந்து ஒரு கொலைக்குத் திட்டமிடுகிறார்கள். திட்டமிட்டபடி கொலை நடந்ததா என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சிவப்பிரகாசம் இசையமைத்துள்ளார்.

மம்முட்டி

மம்முட்டி

இந்தப் படங்களுடன் மம்முட்டியின் ஓணம் ஸ்பெஷலாக வருகிறது தெய்வத்திண்டே ஸ்வந்தம் க்ளீடஸ். தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த சூப்பர் மற்றும் க்ரோன் அப்ஸ் 2 படங்களும் வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X