ஹீரோக்கள் துரத்தும் கொரோனா வைரஸ் ..யாரு பாத்த வேல டா இது ..ட்ரெண்டிங் வீடியோ !

சென்னை : சமூகவலைத்தளத்தில் ஃபைட் (fight )என்ற பெயரில் ஹீரோக்கள் போராடி கொரோனா வைரஸை துரத்தும் மாதிரியான வீடியோ ஒன்று வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது .

லாக் டவுன் சமயத்தில் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் புது முயற்சிகளை செய்து சமூகவலைத்தளங்களில் பிஸியாகவே இருக்கின்றனர்.

எதையாவது செய்து ட்ரெண்ட் ஆகவேண்டும் என்ற நோக்கில் பலரும் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர்.அவர்கள் இடம் இருக்கும் தனிப்பட்ட திறமையை வைத்து புது விதமாக முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இயல்பு நிலை பாதிப்பு

இயல்பு நிலை பாதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கடந்த நான்கு மாதங்களாகவே இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்து உள்ளது .பொருளாதார ரீதியாகவும் பெரும் சரிவையே சந்தித்து உள்ளது. பலரும் ஒர்க் ப்ரம் ஹோம் (work from home ) என்றும் ஆன்லைன் கல்வி போன்றவற்றை சாத்தியமாகி உள்ளது.

சாத்தியமானது

சாத்தியமானது

அனைத்து துறையினரையும் இன்டர்நெட் என்ற ஒன்று பெரிதளவில் முடக்கிபோட்டு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. கம்பெனி களுக்கு சென்று வேலை செய்தவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை , பள்ளிகளுக்கு சென்று படிப்பது என்பது மாறி ஆன்லைன் கல்வி , உணவு முதல் மருத்துவம் வரை அனைத்துமே இந்த இன்டர்நெட் கற்றுத்தந்துள்ளது என்று கூட சொல்லலாம்.

சினிமா நட்சத்திரங்கள்

சினிமா நட்சத்திரங்கள்

பொதுவாகவே பொதுமக்கள் சொல்லும் கருத்துக்களை ஏற்க மறுக்கும் பலரும் , சினிமா நட்சத்திரங்கள் சொன்னால் அதனை அப்படியே சிலர் பின் பற்றுவார்கள். காபி விளம்பரம் முதல் மெத்தை விளம்பரம் வரை , நட்சத்திரங்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என்ற நோக்கம் பலரிடம் உள்ளது அதிலும் பல பெண்கள் அழகு சாதன பொருட்களையும் நடிகைகளை பார்த்து வாங்குவதுண்டு .

அனிமேஷன் வீடியோ

அனிமேஷன் வீடியோ

தற்போதைக்கு இருக்கும் ட்ரெண்ட் கொரோனாவை மையமாக வைத்து நெட்டிசன் ஒருவர் முன்னணி நடிகர்களின் ஹிட்டான படங்களை மையமாக வைத்து மிகவும் தத்ரூபமாக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். ரஜினி, ரோபோ பட ஸ்டைலிலும் , தனுஷ் மாறி பட ஸ்டைலிலும் , கார்த்தி கைதி பட ஸ்டைல் என்று அனைத்தையும் கச்சிதமாகவே செய்து உள்ளார்.

ஓடும் கொரோனா

ஓடும் கொரோனா

அந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமாக சேர்ந்து அனைவரும் கொரோனாவை அழிப்பது மாதிரியான பட அமைப்பு , கை தட்ட வைக்கிறது . இடையில் அவர்கள் பேசும் வசனங்கள் வருவதும் கூடுதல் பலம் தான். எத்தனை பேர் கூடி கூடி சொன்னாலும் கொரோனவை சாதாரணமாக நினைக்கும் சிலருக்கு இந்த படம் சமர்ப்பணம் என்றே சொல்லலாம்.

புதிய முயற்சி

புதிய முயற்சி

அனிமேஷன் என்று எடுத்துக்கொண்டால் 2டி 3டி என்று பலவிதமான நவீன தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது இப்படிப்பட்ட அனிமேஷன் துறையில் பல இளைஞர்களுக்கு மிகவும் மோகம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சினிமா சார்ந்த அனிமேஷன் துறையில் பல விதமான புதிய சாதனைகளை படைக்க வேண்டுமென்று பல புதிய அனிமேட்டர்ஸ் உருவாகி உள்ளனர்.

மிகப்பெரிய சக்சஸ்

மிகப்பெரிய சக்சஸ்

ஒவ்வொரு நாளும் சினிமா கலைஞர்களை வைத்து மீம்ஸ் போடுவது ஒரு பக்கம் என்றால், புதுவிதமான அனிமேஷன் வீடியோவை வெளியிடுவது இன்னொரு பக்கம். அனிமேஷன் வீடியோக்களை பார்க்கும் பொழுது எந்த அளவுக்கு மனதை ஈர்க்கிறது என்பது தான் அனிமேட்டர்சின் சவால். ரியாலிட்டி நூறு சதவீதம் இல்லாவிட்டாலும் கதாபாத்திரத்தை தத்துரூபமாக அனிமேட் செய்து விட்டாலே மிகப்பெரிய சக்சஸ் தான் . ஃபைட் என்ற பெயரில் வெளிவந்த இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். பல சினிமா ரசிகர்கள் இதனை வைரலாக பரப்பி வருகின்றனர். வீட்டில் இருக்கும் நேரத்தில் வெட்டியாக இருக்காமல் புது முயற்சி செய்தவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X