2013ம் ஆண்டின் முதல் பாதியில் ஹிட்டான படங்கள் எவை எவை?
சென்னை: 2013ம் ஆண்டு பிறந்து 6 மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த ஆண்டின் முன் பாதியில் வெளியான படங்களில் எத்தனை ஹிட்டாகின என்று பார்ப்போம்.
2013ம் ஆண்டு இப்பொழுது தான் பிறந்தது போன்று இருக்கிறது. ஆனால் அதற்குள் 6 மாதங்கள் ஓடிவிட்டன. இந்த 6 மாதங்களில் எத்தனையோ தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின.
பல படங்கள் திரைக்கு வந்தபோதிலும் ஒரு சில படங்களே ஹிட்டாகின. அவை எந்தெந்த படங்கள் என்று பார்ப்போம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா
ஜனவரி 11ம் தேதி ரிலீஸான கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் சூப்பர் ஹிட்டானது. காரணம் காமெடி தான். இந்த படம் தான் பவர்ஸ்டாரின் மார்க்கெட்டை கண்டபடி எகிற வைத்தது.

விஸ்வரூபம்
பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு பிப்ரவரி 7ம் தேதி தமிழகத்தில் ரிலீஸான கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் வசூலை அள்ளிக் குவித்தது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா
பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் மார்ச் 29ம் தேதி வெளியான காமெடி படமான கேடி பில்லா
கில்லாடி ரங்கா ஹிட்டானது.

எதிர்நீச்சல்
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிப்பில் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியான எதிர்நீச்சல் ஹிட் படங்கள் வரிசையில் சேர்ந்தது.

சூது கவ்வும்
புதுமுக இயக்குனர் நளன் குமாரசாமியின் படமான சூது கவ்வும் மே மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆனது. விஜய் சேதுபதி நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

தீயா வேலை செய்யணும் குமாரு
சுந்தர் சி. இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு கடந்த மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆனது. சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடும் இந்த படம் ஹிட்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











