twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுன், புதிய கொரோனா கட்டுப்பாடுகள்...படங்கள் காத்திருப்பால் திணறும் கோலிவுட்

    |

    சென்னை : அதிகரித்து வரும் கொரோனா பரவலால் இரவு நேர லாக்டவுனை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    Recommended Video

    மக்களே..! மறவாதீர்..! இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!

    இதனால் மீண்டும் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி திணறி வருகிறது கோலிவுட். படங்களின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்த பல படங்கள் ரிலீசிற்காக காத்திருக்கின்றன.

    கொரோனாவிலிருந்து மீண்ட காதல் ஜோடி… ஹாயாக மாலத்தீவு பறந்தனர் !கொரோனாவிலிருந்து மீண்ட காதல் ஜோடி… ஹாயாக மாலத்தீவு பறந்தனர் !

    பல படங்களை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்தவர்கள், தற்போது புதிய லாக்டவுன் எத்தனை காலம் நீட்டிக்கப்படும் என தெரியாததால் ரிலீசுக்கு காத்திருக்கு படங்களின் நிலை என்னவாகும் என தெரியாமல் படத் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

    தள்ளிபோன எம்ஜிஆர் மகன்

    தள்ளிபோன எம்ஜிஆர் மகன்

    சசிக்குமார் நடித்த எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால்சரியான நேரத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க காத்திருப்பதாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிலீஸ் தேதி எப்போது

    ரிலீஸ் தேதி எப்போது

    நிலைமை சாதகமானதும் தமிழகம் முழுவதிலும் உள்ள விநியோகஸ்தர்களிடம் கூடி ஆலோசித்த பிறகு ரிலீஸ் தேதி பற்றி முடிவெடுக்கப்படும் என கூறி உள்ளனர். டைரக்டர் பூர்ணம் கூறுகையில், படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்க தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள் என்றார்.

    ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட தலைவி

    ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட தலைவி

    முன்னதாக, கங்கனா நடித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தின் ரிலீசும் தள்ளி வைக்கப்படுவதாக ஏப்ரல் 3 ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்தது. அரசின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை கருத்திக் கொண்டு படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதாக படக்குழு கூறியது.

    லாக்டவுன் எப்போது முடியும்

    லாக்டவுன் எப்போது முடியும்

    இதே போன்று ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படமும் ஏப்ரல் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள நிலையால் ரிலீஸ் தேதி இது வரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் எத்தனை காலம் இருக்கும் என்பது தெரியாததால் அரசின் முடிவிற்காக காத்திருக்கிறோம். ஏற்கனவே ஒரு முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் 4 அல்லது 5 நாட்களுக்கு பிறகு இது பற்றி முடிவு செய்வோம் என்றார் டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.

    காத்திருக்கும் பெரிய நடிகர்கள் படங்கள்

    காத்திருக்கும் பெரிய நடிகர்கள் படங்கள்

    இது மட்டுமின்றி பெரி நடிகர்கள் சிலர் நடித்த படங்கள் மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில் அந்த படங்களின் ரிலீசும் கேள்விக்குறி ஆகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் சேதுபதி நடித்த லாபம், அருண் விஜய் நடித்த பார்டர், விஜய் ஆன்டனி நடித்த கோடியில் ஒருவன் என அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களும் ரிலீஸ் தேதி தெரியாமல் முடங்கி உள்ளன.

    ஏற்கனவே பாதிப்பு

    ஏற்கனவே பாதிப்பு

    இதற்கிடையில் தமிழக விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், தியேட்டர் உரிமையாளர்களுடன் இணைய வழியாக மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஏற்கனவே 8 மாதங்களாக லாக்டவுனால் தொழில்கள் கடும் நெருக்கடியில் உள்ளன.

    கைகொடுத்த 4 படங்கள்

    கைகொடுத்த 4 படங்கள்

    மிக கடுமையான சூழலில் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தியேட்டர் திறப்பிற்கு பிறகு மாஸ்டர், காட்சிலா வெசஸ் காங், சுல்தான், கர்ணன் ஆகிய 4 படங்கள் மட்டுமே வசூலில் கை கொடுத்தன. தற்போதுள்ள சூழல் தொடர்ந்தால் என்ன செய்யலாம் என ஆலோசித்து முடிவெடுக்க உள்ளோம் என்றார்.

    ஜூனில் சரியாகும் என நம்புகிறோம்

    ஜூனில் சரியாகும் என நம்புகிறோம்

    கடந்த 2 மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரவு காட்சிகளின் தான் ஓரளவு வசூல் பார்க்க முடிந்தது. தற்போது திடீரென அதிகரித்த கொரோனாவால் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மே மாதம் ரிலீஸ் செய்யப்பட வேண்டிய படங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் நிலைமை சரியாகும் என நம்புகிறோம் என கமலா சினிமாஸ், வெற்றி தியேட்டர்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Due to the surging second wave of the COVID-19 pandemic, Kollywood is once again facing the prospect of its release schedule going for a toss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X