ஜனவரியில் மட்டும் 17 படங்கள் ரிலீஸ்... பிப்ரவரிக்கு 15 படங்கள் அறிவிப்பு!!

By Shankar

புத்தாண்டு பிறந்து முதல் மாதம் முடிந்துள்ள நிலையில், அந்த ஒரு மாத காலத்தில் 17 படங்கள் வெளியாகியுள்ளன.

வீரம், ஜில்லா போன்ற பெரிய படங்களும் இவற்றில் அடக்கம். இந்த 17 படங்களில் குறிப்பிடத்தக்க வசூல் குவித்தவை ஜில்லா வீரம், கோலி சோடா போன்ற மூன்று படங்கள்தான்.

ஆனால் ஜில்லாவும் வீரமும் ஹிட் படங்கள் இல்லை என்று சொல்வோரும் இருக்கின்றனர்.

பெரிய படங்களுக்கே, அதுவும் பிரமாண்ட ஓபனிங்கைப் பெற்ற படங்களுக்கு இதுதான் நிலை என்றால், மற்ற படங்களைப் பற்றி யோசிக்க முடிகிறதா?

பிப்ரவரியில்...

பிப்ரவரியில்...

ஜனவரியில் 17 படங்கள் என்றால், அடுத்த மாதமான பிப்ரவரியில் 15 படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஏற்கெனவே கடந்த வாரம் இங்க என்ன சொல்லுது, நினைத்தது யாரோ, ரம்மி உள்ளிட்ட 5 படங்கள் வெளியாகின.

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும்

பிப்ரவரியின் முதல் வாரமான இந்த வெள்ளிக்கிழமை விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், புலிவால், கோவலன் காதலி, உ ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இது கதிர்வலன் காதல்

இது கதிர்வலன் காதல்

பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி உதயநிதி - நயன்தாரா நடித்த மெகா பட்ஜெட் படமான இது கதிர்வேலன் காதல் வெளியாகிறது. அதே நாளில் ரெட்டை கதிர், வேல்முருகன் போர்வெல் போன்ற படங்களும் வெளியாகின்றன.

பிரம்மன்

பிரம்மன்

சசிகுமாரின் பிரமாண்ட படமான பிரம்மனும் இந்த மாதம்தான் ரிலீசாகிறது. வரும் 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. அதே நாளில் மேலும் இரு படங்களும் வெளியாகின்றன.

நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில்

மாதத்தின் கடைசி நாளான பிப்ரவரி 28-ல் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் வெளியாகிறது. இதே படம் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகிறது. மேலும் நான்கு படங்களும் அன்றைக்கு வெளியாக உள்ளன.

தோல்வி

தோல்வி

இப்படி புதிய படங்கள் வரிசைகட்டி நிற்பதால் போதிய அரங்குகள் கிடைக்காமல், கிடைத்த அரங்கில் வெளியாகி பரிதாபமாக தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிறு பட்ஜெட் படங்களை முறைப்படுத்தி வெளியிட தயாரிப்பாளர் சங்கம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X