»   »  தமிழர்களை அசிங்கப்படுத்திய கன்னட நடிகைக்கு வாய்ப்பு: கோலிவுட்காரர்களுக்கு மான ரோஷமே இல்லையா?

தமிழர்களை அசிங்கப்படுத்திய கன்னட நடிகைக்கு வாய்ப்பு: கோலிவுட்காரர்களுக்கு மான ரோஷமே இல்லையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கேவலமாக பேசிய தன்யாவுக்கு பின்வாசல் வழியாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.

கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. ஏ.ஆர். முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாஸனின் தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.


சிஎஸ்கே

சிஎஸ்கே

2012ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது சென்னை, பெங்களூர் அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணி தோல்வி அடைந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.


பிச்சைக்காரர்கள்

பிச்சைக்காரர்கள்

டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்கு பிச்சை எடுத்தீர்கள், நாங்கள் கொடுத்தோம். நீங்கள் மின்சாரத்திற்கு பிச்சையெடுத்தீர்கள் நாங்கள் கொடுத்தோம். உங்கள் ஆட்கள் எங்கள் அழகான நகரை (பெங்களூர்) வந்து ஆக்கிரமித்துக்கொண்டு அசிங்கப்படுத்தினீர்கள், அதை அனுமதித்தோம். இப்போதும், பிளேஆப் நீங்கள் செல்ல எங்கள் கருணைதான் தேவைப்படுகிறது. நாங்கள் இப்படித்தான். நீங்கள் பிச்சையெடுப்பதும், நாங்கள் கொடுப்பதும் வழக்கம்" என்று திமிர்த்தனமாக கருத்து தெரிவித்தார் தன்யா.


சர்ச்சை

சர்ச்சை

தன்யாவின் கருத்தை கேட்டு தமிழர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து நான் தமிழ் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று வீராப்பாக பேசிவிட்டு சென்றவர் கமுக்கமாக கொள்ளைப்புறம் வழியாக தற்போது வந்துள்ளார்.


வெப்சீரிஸ்

வெப்சீரிஸ்

பாலாஜி மோகன் இயக்கி வரும் வெப்சீரிஸான As I'm Suffering From Kadhal என்ற தொடரில் நடித்து வருகிறார் தன்யா. தமிழர்களை துப்பாத குறையாக பேசிய தன்யாவுக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.


வாசகர்

வாசகர்

தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூய நடிகை தன்யா பாலகிருஷ்ணன் - ஏன் இந்த நடிகையை தமிழ் சினிமா உலகம் எதிர்க்கவில்லை, ஏன் சினிமா காரர்கள் தமிழர்கள் இல்லையா அல்லது அவர்களுக்கு மான ரோஷம் இல்லையா? எவென் வேனா தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தலாம் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இந்த தன்மானம் இல்லாத தமிழர்கள் தான் திருந்த வேண்டும் என்று ஒன்இந்தியா வாசகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.English summary
Tamil fans are really angry with Kollywood as it has given opportunity to Kannada actress Dhanya who called Tamils as beggars.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil