Don't Miss!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பொங்கல் படங்கள் - இதான் ஃபைனல் லிஸ்ட்!
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூல் சீஸனான பொங்கல் விடுமுறையைக் கொண்டாட வழக்கமாக ஏகப்பட்ட படங்கள் வெளியாவது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 5 படங்கள் வெளியாவதாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் விஸ்வரூபம் பின்வாங்கியதால், இப்போது ஐந்து படங்கள் வெளியாக உள்ளன. அவற்றைப் பற்றி ஒரு அலசல்...
அலெக்ஸ் பாண்டியன்
கார்த்தி - அனுஷ்கா - சந்தானம் நடித்துள்ள இந்தப் படம்தான் இந்த பொங்கலின் நிச்சய ஹிட் என்கிறார்கள். சுராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்குமேல் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளும் அதிகமாகம். கார்த்தி கேரியரில் மிகப்பெரிய ரிலீஸ் இந்தப் படம். நாளையே படம் வெளியாகிறது.
சமர்
தியேட்டர்கள் பற்றாக்குறையால் வருமா வராதா என்று கடைசி வரை தவித்துக் கொண்டிருந்த படம் சமர். விஷால் - த்ரிஷா முதல் முறை ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தை திரு இயக்கியுள்ளார். தமிழகத்தில் 300 அரங்குகள் வரை இப்போது படத்துக்கு கிடைத்துள்ளன. ஜனவரி 13-ம் தேதி போகியன்று படம் வெளியாகிறது.
புத்தகம்
நடிகர் ஆர்யாவின் தம்பி, சத்யா, இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் புத்தகம். ராகுல் ப்ரீத்தம் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ளார்.
விஜயநகரம்
கல்வி நிறுவனங்களில் நடக்கும் மதிப்பெண் மோசடியை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் விஜயநகரம். இந்தப்படத்தில் சிவன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஹாசினி நடிக்கிறார். இவர்களுடன் பானுசந்தர், ஆர்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தன்வீர் இயக்கியுள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா
திருட்டுக் கதை என்ற இமேஜ் விழுந்ததால் டேமேஜாகிப் போயிருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையாவும் இந்தப் பொங்கலுக்கு, 300 திரையரங்குகளில் வெளியாகிறது. திரையில் காமெடியனாக இருந்த சந்தானம், நிஜத்தில் வில்லனாகக் காட்சி தருகிறார் இந்தப் படம் மூலம். தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்ட சீனிவாசனை நம்பி பெரிதாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.