சினிமாவில் அசத்தும் சகோதரி நடிகைகள்

By Mayura Akilan

சகோதரிகள் இணைந்து சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிய விசயமில்லை.

லலிதா-பத்மினி-ராகினியில் தொடங்கி இன்றைக்கு கார்த்திகா-துளசி வரை மலையாள தேசத்தில் இருந்து சகோதரிகள் பலர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளனர்.

தொலைக்காட்சி சீரியர்களில் சகோதரிகள் நடிக்கின்றனர். அவர்களில் பலர் பிரபலம் அடைந்துள்ளனர்

தற்போது புதிய வரவாக தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் ஸ்ரீ ரம்யா - ஸ்ரீ திவ்யாவின் வரவு சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அம்பிகா – ராதா

அம்பிகா – ராதா

தமிழ் சினிமாவில் கோலோச்சிய சகோதரிகள் அம்பிகா - ராதா. எண்பதுகளில் தமிழ்சினிமாவில் இவர்களின் ராஜ்ஜியம்தான்.

ஊர்வசி – கல்பனா

ஊர்வசி – கல்பனா

பாக்யராஜ் படமான முந்தானை முடிச்சு படத்தின் தமிழில் அறிமுகமானவர் ஊர்வசி அதே பாக்யராஜ்தான் அவரது அக்காவான கல்பனாவை சின்னவீடு படத்தில் நடிக்க வைத்தார். இந்த சகோதரிகளில் ஊர்வசிதான் அதிக படங்களில் நடித்தார்.

டிஸ்கோ சாந்தி – லலிதா குமாரி

டிஸ்கோ சாந்தி – லலிதா குமாரி

பிரபல நடிகர் ஆனந்தனின் மகள்கள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி. சாந்தி கவர்ச்சி நடிகையானர். லலிதாகுமாரி காமெடி நடிகையாக நடித்தார்.

சிம்ரன்-மோனல்

சிம்ரன்-மோனல்

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தொடங்கி 2005 வரை தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை சிம்ரன். இன்றைக்கும் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பு, தயாரிப்பு என பரபரப்பாக இருக்கிறார். இவரது சகோதரி மோனல் சில படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பின்னர் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்டார்.

 நக்மா-ஜோதிகா

நக்மா-ஜோதிகா

தொண்ணூறுகளில் வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கிய சகோதரிகள் நக்மா, ஜோதிகா. இதில் ஜோதிகா தமிழ்நாட்டு சூர்யாவை மணந்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

 காஜல் அகர்வால்- நிஷா அகர்வால்

காஜல் அகர்வால்- நிஷா அகர்வால்

அகர்வால் சகோதரிகள் என்று வர்ணிக்கப்படும் காஜல் அகர்வால், நிஷா அகர்வால் இப்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

கார்த்திகா - துளசி

கார்த்திகா - துளசி

நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களில் கார்த்திகா பல படங்களில் நடித்து வருகிறார். கடல் படத்தில் அறிமுகமான துளசி அவ்வளவாக சோபிக்கவில்லை.

ஸ்ரீ ரம்யா – ஸ்ரீ திவ்யா

ஸ்ரீ ரம்யா – ஸ்ரீ திவ்யா

தெலுங்கு சகோதரிகள் ஸ்ரீரம்யா-ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஸ்ரீரம்யா, தெலுங்கில், ‘ஒக்க கிராமம்' என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே மொட்டை அடித்து நடித்து ஆந்திர அரசின் சிறந்த நடிகைக்கான நந்தி விருது பெற்றார். பிறகு தமிழில் ‘யமுனா' என்ற படத்தில் அறிமுகமானார். இவரின் தங்கை ஸ்ரீ திவ்யா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்' அறிமுகமாகியிருக்கிறார். இப்போது ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. சகோதரிகளுக்கு இருக்கும் ஒரே ஆசை இருவரும் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதாம்.

ஷாலினி – ஷாம்லி

ஷாலினி – ஷாம்லி

குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான ஷாலினி அப்போதே சூப்பர் ஹிட் நடிகையாக பேசப்பட்டார். அவரைத் தொடர்ந்து சகோதரி ஷாம்லியும் நடிக்க வந்தார். ஷாலினி ஷாம்லி இருவரும் குமரியான பின்னரும் நடிக்க வந்தனர். இதில் ஷாலினி அஜீத்தை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஷாம்லி நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X