போட்ரா வெடிய...தீபாவளிக்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி? விறுவிறுப்பான படப்பிடிப்பு!

சென்னை: மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ள நிலையில், இப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு தியேட்டரில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு படம் வெளியாகி வசூலை அள்ளியது. துணிவு படம் வெளியான போது, விஜய்யின் வாரிசு படமும் வெளியானது. இதனால், அந்த பொங்கலை தல, தளபதி ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடினர். துணிவு படம் முடிந்த உடனே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்து இருப்பதாகவும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

Ajith Vidaamuyarchi Diwali release

விறுவிறுப்பான படப்பிடிப்பு: இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்தார். இந்த படப்பிடிப்பின் போது அஜித்தும், ஆரவ்வும் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'விடாமுயற்சி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

தீபாவளி ரேஸில்: இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மற்றும் அஜித் அஜர்பைஜான் சென்று விட்டதாகவும், மேலும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்துவிட்டு வரும் தீபாவளி அன்று இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதனை அடுத்து தீபாவளிக்கு 'விடாமுயற்சி' ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜூன் 24: இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் அஜர்பைஜானில் நடிகர் அஜித்துடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு ஜூன் 24 தொடங்கும் என்று படக்குழுவிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒன்பது ஆண்டுக்கு பிறகு: 2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த வேதாளம் தீபாவளிக்கு வெளியானது, அதன் அஜித்தின எந்த படமும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் தீபாவளிக்கு விடாமுயற்சி படம் வெளியானது. மேலும், தீபாவளி பாக்ஸ் ஆபிஸ் சூர்யா நடித்த 'கங்குவா' படமும், மேலும் சில பெரிய படங்களும் வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X